search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை புட்டுத்திருவிழா: திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகர் 4-ந் தேதி புறப்படுகிறார்
    X

    மதுரை புட்டுத்திருவிழா: திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகர் 4-ந் தேதி புறப்படுகிறார்

    • மதுரை புட்டுத்திருவிழாவில் பங்கேற்க திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகர் 4-ந் தேதி புறப்படுகிறார்.
    • திருவிழா முடிந்த பின்பு மாணிக்கவாசகர் மீண்டும் திருவாதவூர் திரும்புகிறார்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இது ''திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்'' என்று திருவாசகத்தை உலகுக்கு அருளிய மாணிக்க வாசகர் அவதரித்த திருத்தலமாகும்.

    இந்த கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சேர்ந்தது ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் ஆவணி மூல திருவிழாவின் போது 16 கால் மண்டபத்தில் குதிரை கயிறு மாறுதல் லீலை, நரியை பரியாக்கும் நிகழ்ச்சி, புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு நடைபெறும் இந்த திருவிழாவில், வருகிற 5-ந் தேதி (திங்கட்கிழமை) நரியை பரியாக்கும் நிகழ்ச்சியும், அடுத்த நாள் 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமையும்) மதுரை புட்டு தோப்பில் புட்டுக்கு மண் சுமக்கும் திருவிழாவும் நடைபெறுகிறது.

    மீனாட்சி-சுந்தரேசுவரருடன் இணைந்து மாணிக்கவாசகர் வீதிஉலா வருவதற்காக திருவாதவூர் கோவிலில் இருந்து மாணிக்கவாசகர் மதுரைக்கு வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 6.30 மணிக்கு புறப்படுகிறார். வழி நெடுக மண்டகப் படிகளில் அருள் பாலித்து அன்று மாலை மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைவார்.

    திருவிழா முடிந்த பின்பு மாணிக்கவாசகர் மீண்டும் திருவாதவூர் திரும்புகிறார்.

    Next Story
    ×