என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பயிர்களை சேதப்படுத்திய காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
- பயிர்களை சேதப்படுத்திய காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடலை, கரும்பு, மக்காசோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தாலுகா தென்னமநல்லூர், சித்துர், எம்.புளியங்குளம், சேர்வரக்காரன்பட்டி, மையிட்டான்பட்டி, உவரி, போத்தநதி, எம்.புதுப்பட்டி மறவப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பகுதியில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கடலை, கரும்பு, மக்காசோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ளனர். 4 மாதத்திற்கு பின்பு தற்போது பயிர்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.
சில தினங்களாக காட்டு பன்றிகள் இரவு வேளையில் கூட்டம், கூட்டமாக விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. கரும்பு, மக்காசோளம், கடலை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இது குறித்து தென்னமநல்லூர் விவசாயிகள் ரவி, பாண்டி ஆகியோர் கூறுகையில், கடலை, மக்காசோளம் மற்றும் கரும்பு பயிரிட்டுள்ளோம். இதுவரை ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.
பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இரவு நேரத்தில் வரும் காட்டுபன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி உள்ளன.
வயல்வெளியில் காவல் இருந்தாலும் ஆள்அரவரமற்ற பகுதியில் அவை நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வேளாண்மை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளோம்.
இது குறித்து வனத்துறை யினரிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இரவு நேரங்களில் பயிர்களை சேதப்படுத்திவிட்டு பகலில் கண்மாயில் உள்ள முட்புதர்களில் காட்டுப்பன்றிகள் பதுங்கிக் கிடக்கிறது.
எனவே கருவேல மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டு பன்றிகளிடம் இருந்து பயிர்களை காக்க நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கவேண்டும்.
சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தரவேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்