search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னை பாத்திமா கல்லூரியில் தேசிய மருத்துவ கருத்தரங்கு
    X

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பரிசுகளை வழங்கினார்.

    அன்னை பாத்திமா கல்லூரியில் தேசிய மருத்துவ கருத்தரங்கு

    • அன்னை பாத்திமா கல்லூரியில் தேசிய மருத்துவ கருத்தரங்கு நடந்தது.
    • பேராசிரியர் சவுபியா பானு நன்றியுரை ஆற்றினார்.

    திருமங்கலம்

    வருடந்தோறும் செப்டம் பர் மாதத்தை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடித்து வருவதை முன்னிட்டு திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின்படி ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறையின் சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஒரு நாள் ஹெல்த் பெஸ்ட்-2023 என்ற கருத்தரங்கம் நடந்தது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் கரு த்தரங்கை தொடங்கி வைத்து உடல்நலம், உணவு பழக்கம் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியர் கீதாஞ்சலி மாணவிகளுக்கு ஏற்படும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை உணவு பழக்க வழக்கத்தின் மூலம் எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி விளக்கி கூறினார். மேலும் பல்வேறு பழங்களில் உள்ள சத்துக்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

    முன்னதாக பேராசிரியர் பொன்மயில் வரவேற்றார். இக்கருத்தரங்க நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மதுரை லேடி டோக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பல போட்டிகளில் வெற்றி பெற்ற ஒட்டுமொத்த சாம்பி யன் சுழற்கோப்பையையும், கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி மாணவிகள் 2-ம் பரிசுக்கான சுழற்கோப்பை யையும் வென்றனர்.

    மாலையில் நடந்த இறுதி அமர்வில் நிர்வாகவியல் பேராசிரியர் நாசர் வாழ்த்துரை வழங்கினார். ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறை தலைவர் சுபஸ்ரீ கருத்தரங்க அறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஹாஸ்பிடல் மேனேஜ் மென்ட் துறை தலைவர் சுபஸ்ரீ தலைமையில் பிரியா, நேயா, ஸ்ருதி, சமீரா, மர்ஷியா, அர்ச்சனா, சிம்சன், பரத், பிரியதர்ஷன், ஹரி கிருஷ்ணா, கலையரசி, சுமித்ரா ஆகிய மாணவ-மாணவிகள் செய்தனர்.

    பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பேராசிரியர் சவுபியா பானு நன்றியுரை ஆற்றினார்.

    Next Story
    ×