search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லக்கு, தங்க குதிரை வாகனங்களில் எழுந்தருளிய முருகப்பெருமான்
    X

    மொட்டையரசு திருவிழாவில் தங்க குதிரை வாகனத்தில் தெய்வானையுடன், முருகப்பெருமான் எழுந்தருளினார்.

    பல்லக்கு, தங்க குதிரை வாகனங்களில் எழுந்தருளிய முருகப்பெருமான்

    • மொட்டையரசு திருவிழாவில் தங்க குதிரை வாகனத்தில் தெய்வானையுடன், முருகப்பெருமான் எழுந்தருளினார்.
    • காலையில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 3-ந் தேதி வசந்த உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் இரவு முருகப்பெருமான் தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று மீண்டும் உற்சவர் சன்னதிக்கு வந்தடைவார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம், காவடி, பறவைக்காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வந்து திருப்பரங்குன்றம் சண்முகர், வள்ளி, தெய்வா னைக்கு பாலா பிஷேகம் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக மொட்டை யரசு திருவிழா இன்று நடந்தது. காலையில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    சிறப்பு அலங்காரத்தில் முருகன்,தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கோவிலில் இருந்து புறப்பட்டு முருகப்பெருமான் பல்வேறு மண்டபங்களில் திருக்கண் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மொட்டையரசு திடலில் எழுந்தருளிய முருகப்பெருமான் அங்கு ஒவ்வொரு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மாலை வரை மொட்டை அரசு திடலில் இருக்கும் முருகப்பெருமான் இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வந்தடைவார். வழியெங்கும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணை யர் சுரேஷ் மற்றும் பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×