என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய வியாபாரிகளுக்கு அபராதம்
- தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பேரூராட்சி இணைந்து உதவி பொறியாளர் உஷாராணி தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மளிகை மற்றும் ஜவுளி உள்ளிட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்கள் என 12 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்காக ரூ.3 ஆயிரத்து 600 வரை அபராதம் விதித்தனர். அனைத்து வியாபாரிகளுக்கும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்து வோருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
இந்த ஆய்வின்போது செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.