search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைனில் மோசடி செய்த ரூ.30 லட்சம் மீட்பு
    X

    ஆன்லைனில் மோசடி செய்த ரூ.30 லட்சம் மீட்பு

    • ஆன்லைனில் மோசடி செய்த ரூ.30 லட்சம் மீட்கப்பட்டது.
    • பொதுமக்கள் 9498181206 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.

    மதுரை

    தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டம் மதுரை யில் உள்ள சங்க அரங்கத்தில் நடந்தது. சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் கூறியதாவது:-

    காவல்துறையினர் தொழில்துறையினருடன் இணக்கமான சூழலில் இருக்கிறோம். சரக்குகளை ஏற்றிச்செலவதற்கு வாகன போக்குவரத்து வியாபாரி களுக்கு மிகவும் முக்கிய மானதாகும. அப்போது பிரச்சினை ஏற்படும்போது போலீசார் மிகவும் உதவியாக இருக்கிறோம்.

    சமீபத்தில் பைக்-லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தவறு பைக் ஓட்டி வந்தவர் மீதுதான் என்று தெரிந்தது. இது என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது பற்றி நான் விசாரித்தபோது மோதிய 2 வாகனங்களில் எது பெரியதோ அதன்மீது தான் வழக்கமாக வழக்குப்பதிவு செய்து உள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    நான் அவர்களை எச்சரித்து தவறு இருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். பொய்யாக இப்படி செய்யாதீர்கள் என்று சொல்லி உண்மை குற்றவாளி மீது வழக்குப்பதிய கூறினேன்.

    டோல்கேட் அருகே சரக்கு வாகனங்களை மறித்து பணவசூல் செய்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. நான் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை செய்தேன். பின்னர் இதில் தொடர்பு டைய ஆர்.ஐ. மீது நடவடிக்கை எடுத்தேன். அவர் உடனடியாக விருது நகருக்கு மாற்றப்பட்டார். இவ்வா றாக வியாபா ரிகளின் நியாயமான புகாருக்கு உதவியாக இருந்து வருகி றோம்.

    மேலும் இணைய வழியில் வர்த்தகம் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக பண பரிவர்த்தனை செய்ய வேண்டும். வெளி மாநிலங்களில் நிறைய மோசடி கும்பல் செயல் படுகின்றன. அவர்கள் போலியான ஜி.எஸ்.டி. எண்கள் வைத்து போலியான முகவரியில் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்தவர்கள் 1 மணி நேரத்துக்குள்ளாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்தால் இழந்த பணத்தை உடனடியாக மீட்டு விடலாம்.

    மதுரை மாவட்டத்தில் ரூ.30 லட்சம் மீட்க்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் ஓராண்டில் கஞ்சா வழக்குகளில் ரூ. 9 கோடி அளவிற்கு சொத்துக் கள் முடக்கக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்கள் 9498181206 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×