search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருவேல மரங்களை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது-அமைச்சர்
    X

    மதுரை ஒத்தக்கடை அரசு வேளாண் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான உழவர் திருவிழாவில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.மூர்த்தி ஆகியோர் பங்கேற்று கண்காட்சியை பார்வையிட்டனர். அருகில் முதன்மை செயலாளர் சமயமூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், பூமிநாதன் எம்.எல்.ஏ., வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலடசுமி உள்ளனர்.

    கருவேல மரங்களை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது-அமைச்சர்

    • கருவேல மரங்களை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
    • சிறுதானியங்களை ரேசன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் மாநில அளவிலான உழவர் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக அங்கு பிரத்தியேக ஸ்டால்கள் போடப்பட்டு உள்ளன. அங்கு வேளாண் விதைகள் மற்றும் கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

    இதனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    விவசாயிகளின் வளர்ச்சியை தடுக்கும் கருவேல மரங்களை அகற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இது விவசாய தொழிலை நாசமாக்கி வருகிறது. கருவேல மரங்களை எப்படி அகற்றினாலும் மீண்டும் வந்து விடுகிறது.

    தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சிறுதானியங்களை ரேசன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

    நிகழ்ச்சியில் தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஸ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் காலோன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முதன்மை செயலாளர் சமயமூர்த்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலடசுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×