search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூலகத்தை காணவில்லை என்று புகார்
    X

    நூலகத்தை காணவில்லை என்று புகார்

    • அவனியாபுரத்தில் நூலகத்தை காணவில்லை என்று புகார் எழுந்தது.
    • கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரத்தில் 1953-ம் ஆண்டு திரு.வி.க. நூல் நிலையம் தொடங்கப்பட்டது. அப்போது அவனியாபுரம் ஊராட்சியாக இருந்தது.

    பின்னர் அவனியாபுரம் நகர் பஞ்சாயத்து யூனியனுக்கு கட்டிடங்கள் கட்டும்போது இந்த நூலகம் அவனியாபுரம் மெயின் ரோட்டில் உள்ள வாடகை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அந்த கட்டிடம் பழமையான கட்டிடமாக மாறிய நிலையில் இந்த நூலகம் தற்போது அவனியாபுரம் அஞ்சலகம் இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள அரண்மனைகாரர் வாடகை கட்டிடத்தில் இயங்கியது. அதன் பின்னர் அவனியாபுரம் நகராட்சியாக மாறியது. தற்போது மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்போது இந்த நூலகம் எங்கு செயல்படுகிறது? என தெரியவில்லை. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த வாசகர் சிவமணி கூறுகையில், மிகப் பழமை வாய்ந்த அவனியாபுரம் நூலகம் தற்போது எங்கு செயல்படுகிறது? என தெரியவில்லை. திரைப்பட நகைச்சுவை காட்சியை போல் கல்வெட்டு இருக்கிறது. ஆனால் கட்டிடத்தை காணவில்லை.

    தற்போது இந்தப்பகுதி யில் நூலகம் இல்லாதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றார். இந்தப்பகுதியில் தமிழ் அகிலன் கூறுகையில், அவனியாபுரத்தில் இருந்த நூலகத்தில் நான் பேரறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, மாஜி கடவுள், நீதி தேவன், ஓர் இரவு,போன்ற புத்தகங்களை படித்து இருக்கின்றேன் மேலும் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் ஜெயகாந்தனின் சிறுகதைகள் போன்ற புத்தகங்களை இந்த நூலகத்தில் படித்திருக்கி றேன். தற்போது இந்த பகுதியில் நூலகம் இல்லாதது பெரும் வருத்தம் அளிக்கிறது என்றார்.

    மேலும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாசிப்பு திறனை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் ஆண்டு தோறும் புத்தகத்திருவிழா நடத்தி மாணவர்களிடம், இளைஞர்களிடம் வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தி வருகிறது. ஆனால் பழமை யான நூலகத்தை கண்டு கொள்ளாமல் விட்டது அதிருப்தி அளிகிறது. எனவே கலெக்டர் இதில் கவனம் செலுத்தி அவனி யாபுரம் மையப்பகுதியில் கவுன்சிலர்கள் அலு வலகத்தின் மாடியில் காலியாக உள்ள இடத்தில் நூலகத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×