search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோவில் கும்பாபிஷேகம்

    கோவில் கும்பாபிஷேகம்

    • மதுரை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கள்ளழர் வேடமணிந்த சுந்தராஜப்பெருமாள் தேனூர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தேனூரில் பிரசித்தி பெற்ற சுந்தரராஜ பெருமாள் (கள்ளழகர்) கோவில் உள்ளது. இந்த கோவில் மற்றும் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    தேனூர் கிராமத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வைகையாற்றில் மண்டூக முனிவருக்கு சாபமோட்சம் கொடுக்க அழகர் மலையில் இருந்து சுந்தராஜப்பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து விமோசனம் கொடுக்கும் நிகழ்வு நடந்து வந்த நிலையில் சுமார் 364 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை திருமலைநாயக்கர் மன்ன ரால் இந்த நிகழ்வு மதுரைக்கு மாற்றிய மைக்கப்பட்டது.

    பின்னர் 2008ம் ஆண்டு முதல் தேனூர் சுந்தராஜப்பெருமாள் கோவில் பரம்பரை அறங்காவலரும் தர்மகர்த்தா வுமான நெடுஞ்செழிய பாண்டியனின் முயற்சியால் கள்ளழர் வேடமணிந்த சுந்தராஜப்பெருமாள் தேனூர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடந்து வந்த நிலையில் கடந்தாண்டு இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்தன.திருப்பணிகள் நிறை வடைந்த பின்னர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருகோஷ்டியூர் லட்சுமிநரசிம்மர் பட்டர் தலைமையில் விக்னேஷ்வரா பூஜையுடன் யாகசாலை தொடங்கியது.

    பின்னர் விநாயகர் பூஜை, வாஸ்து பூர்ணாஹூதி உள்ளிட்ட 4 கால பூஜைகள் நிறைவடைந்து.

    நேற்று காலை கடம் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது.

    மூலவர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் விநாயகருக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது.

    பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழியபாண்டியன், ராமகிருஷ்ணா தபோவன கவுரவ தலைவர் நியமனாந்தா மஹராஜ், சங்கரசீத்தாராமன் வழக்க றிஞர் ராமகிருஷ்ணன், பேராசிரியர் ராமன், கோவில் அறங்காவலர் கவுதம்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×