என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்
- பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும்.
- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலூர்
மேலூர் பகுதி விவசா யத்திற்கு பெரியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம் மேலூர் பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க கோரி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை சட்டமன்ற சட்டசபை அரங்கில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார். அதில் கூறியருப்பதாவது:-
மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் விவசாயம் சார்ந்த பகுதியாகும். முல்லைப் பெரியாறு கால்வாயில் இருந்து மேலூர் ஒருபோக பாசன விவசாயம் சாகுபடி செய்து வருகிறோம். தற்போது முல்லைப் பெரியாறு அணையில் 133 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும் இருபோக பாசனப்பகுதியில் அதிக விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிவிட்டன. தற்போது அணையில் இருக்கும் தண்ணீர் ஒருபோக பாச னத்திற்கு போதுமானதாக இருக்கும். எனவே மேலூர் ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.