என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. தோற்பது உறுதி- ஆர்.பி.உதயகுமார்
- எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. தோற்பது உறுதி என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
- இந்த ஆட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
மதுரை
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்காக மக்களை குடும்பம், குடும்பமாக பங்கேற்கும் வண்ணம் அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்று வழங்கியும், மாநாடு லோகோ ஸ்டிக்கரை இருசக்கர வாகனங்களுக்கு ஒட்டி அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி கே.கே. நகர் பூங்கா அருகே நடைபெற்றது.
மரக்கன்றுகளை பொது மக்களுக்கு வழங்கியும், இரு சக்கர வாகனங்களுக்கு ஸ்டிக்கரை ஒட்டி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாநாடுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், மாநில அம்மா பேரவை வெற்றிவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆர்.பி.உதய குமார் கூறியதாவது:-
எடப்பாடியார் தலைமை யில் ஆகஸ்டு 20-ந்தேதி நடைபெறும் மாநாட்டிற்கு, தமிழகம் மட்டுமல்லாது, இந்திய தேசம் மட்டுமல்ல, உலக மக்களே கவனத்துடன் எதிர்கொண்டு வருகி றார்கள். இதனை தொடர்ந்து அம்மா பேரவை யின் சார்பில் ஒரு லட்சம் குடும்பங்களை பங்கேற்க செய்யும் வகையில் இல்லம் தோறும் இலை மலர மரக்கன்று வழங்கப்பட்டு வருகிறது.
மாநாட்டு விழிப்பு ணர்வுக்காக 2 சக்கர வாகனங்களில் மாநாட்டு லோகோ கொண்ட ஸ்டிக்கர் பொருத்தப்பட்டு வருகிறது.தி.மு.க. அரசு விலைவாசி உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
சொத்து வரி உயர்வில் கின்னஸ் சாதனை படைத் துள்ளது. பால் விலை உயர்வில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
இந்த சர்வதாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஜனநாயகத்தை மீட்டெக்கும் வகையில் மாநாடு அமையும். நாள் தோறும் எடப்பாடியார் தி.மு.க. அரசின் செயல் பாடுகளை தோலுரித்துக் காட்டிவருகிறார். ஆனால் முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
முல்லைப் பெரியாறு அணையில் புதிய அணை கட்ட கேரளா அரசு முயற்சிக்கிறது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு பொய் சொல்வதில் கின்னஸ் சாதனையை அரசு படைத்துள்ளது. கருணாநிதி நூற்றாண்டு மாரத்தான் போட்டியில் கின்னஸ் சாதனை என்று கூறுகிறார்கள்.
ஆனால் இன்றைக்கு பொய் சொல்வதில் தி.மு.க. அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு அமையும்.மாநாட்டில் எத்தனை லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்டாலும் அவர்களுக்கு சுடசுட உணவு வழங்க வேண்டும் என்று எடப்பாடியார் ஆணையிட்டு உள்ளார்.
எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியாரை கோட்டைக்கும், ஸ்டாலினை வீட்டுக்கும் அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இந்த ஆட்சியினால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. தோற்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்