search icon
என் மலர்tooltip icon

    மதுரை

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட டி.டி.எப். வாசனிடம் செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் சம்மன் வழங்கினர்.
    • டி.டி.எப் வாசன் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    மதுரை:

    சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த மாதம் 15-ந்தேதி டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

    இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கில் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் வழங்கிய மதுரை மாவட்ட 6-வது ஜூடிசியல் கோர்ட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட டி.டி.எப். வாசனிடம் செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் சம்மன் வழங்கினர்.

    இதையடுத்து, செல்போனில் பேசிய படி காரை ஓட்டிய வழக்கில் டி.டி.எப் வாசன் தனது செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். நிபந்தனை ஜாமினில் வந்த டி.டி.எப் வாசன் செல்போன் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    • காங்கிரஸ் சிவகங்கை தொகுதியில் வெற்றி வாகை சூடியது.
    • ப.சிதம்பரம் தான் சிவகங்கையின் அடையாளம் என்று மாறிப்போனது.

    சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளுடன், புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், ஆலங்குடி தொகுதிகளை உள்ளடக்கிய சிவகங்கை தொகுதியில் நீண்ட காலம் வென்ற கட்சி காங்கி ரஸ். பல முறை வென்று எம்.பி.யாக இருந்தவர் ப.சிதம்பரம். அ.தி.மு.க., தி.மு.க. என மாறி மாறி கூட்டணியில் இந்த தொகுதியை காங்கிரஸ் தொடர்ந்து தக்க வைத்து வந்துள்ளது.

    திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையாங்குடி மற்றும் சிவகங்கை என 6 சட்டசபை தொகுதிகளை கொண்ட இத்தொகுதியில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிகம் என்பதால், அதே பின்புலத்தை கொண்ட ப.சிதம்பரத்தை மக்கள் 7 முறை மக்களவைக்கு அனுப்பியுள்ளனர்.

    திருப்புவனம், புஷ்பவனம், குன்றக்குடி குடைவரை கோவில், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளிகோவில், மடப்புரம் காளியம்மன் கோவில், நாட்டரசன்கோட்டை, மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில், இடைக்காட்டூர் இருதய மாதா கோவில் உள்ளிட்டட் பல கோவில்கள் நிறைந்த சிவகங்கை , ஆன்மீக பூமியாகவும், மருது பாண்டியர்கள், வேலுநாச்சியார் ஆட்சி செய்த வீரத்தின் விளைநிலமாகவும் உள்ளது.

    சிவகங்கையில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், பாசனத்திற்கு தேவையான நீர் இல்லை என்பதும், இங்கு புதிய தொழில்களை துவங்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், காரைக்குடி, திருப்பத்தூர் வழியாக திண்டுக்கல்லுக்கும், தொண்டி, சிவகங்கை வழியாக மதுரைக்கும் புதிய ரெயில் வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும், காரைக்குடி செட்டிநாடு விமான நிலை யம் அமைப்பது, சிவகங்கை கிராபைட் உபதொழிற்சா லைகள் ஏற்படுத்துவது, சிங்கம்புணரியில் கயிறு வாரியம் அமைப்பது போன்ற கோரிக்கைகள் இம்மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளன.

    காங்கிரஸ் கட்சியினர் தான் இந்த தொகுதியில் கோட்டை அமைத்திருக்கிறது என்று கூறவே இயலாது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் கோட்டையாகவே தான் இது இருக்கிறது. இத்தொகுதி பிரிக்கப்பட்டு முதல் இரண்டு முறை நடைபெற்ற (1967-71, 1971-77) தேர்தல் களில் தி.மு.க.வை சேர்ந்த தா.கிருஷ்ணன் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

    77-80 காலகட்டத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பெரிய சாமி தியாகராஜன் என்ப வரை உறுப்பினராக மக்கள் தேர்வு செய்தனர். அதன் பின்பு காங்கிரஸ் அங்கு கோலூன்ற துவங்கியது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.சுவாமிநாதன் அதன் பின்பு தேர்வு செய் யப்பட்டார். காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் என்று மாறி மாறி ப.சிதம்பரம் தான் சிவகங்கையின் அடையாளம் என்று மாறிப்போனது என்றாலும் மிகையாகாது.

    காங்கிரசில் இருந்து ப.சிதம்பரம் பிரிந்திருந்த சம யத்தில் காங்கிரஸ் வேட்பா ளர் சுதர்சன நாச்சியப்பனை சிவகங்கையில் நிற்கவைத்து வெற்றி வாகை சூட வைத்தது காங்கிரஸ். பின்பு காங்கிர சில் மீண்டும் இணைந்தார் ப.சிதம்பரம். 2014 தேர்தலில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் வேட்பாளாராக காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டார். தி.மு.க. சார்பில் சுப.துரைராஜூம், அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதனும், பா.ஜ.க. சார்பில் எச்.ராஜாவும் நிறுத்தப்பட்டனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த செந்தில்நாதன் 4,75,993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    2014 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் 2-வது இடத்தில் தி.மு.க.வு.ம், மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க. 3-வது இடத்தையும் பிடித்தன. சொந்த செல்வாக்கு இருந்தபோதிலும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு 4-வது இடமே கிடைத்தது. ஆனால் கடந்த 2019 தேர்தலில் மீண்டும் ப.சிதம்பரத்தின் "கை" ஓங்கியது.

    இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். 2019-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 5.50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா போட்டியிட்டார். அவருக்கு 2 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வரை கிடைத்தன.

    அதே போல கடந்த முறை தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி இம்முறை தி.மு.க. கூட்டணியில் இணைந்தது. தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் நிலவிய கோஷ்டி பூசல்கள், கார்த்தி சிதம்பரத்தின் சர்ச்சை பேச்சுகள் போன்றவை சிவகங்கை தொகுதியில் இம்முறை காங்கிரஸ் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன.

    ஆனால் அனைத்து யூகங்களையும் தகர்த்து ப.சிதம்பரத்தின் கை ஓங்கியதன் மூலம் இம்முறையும் காங்கிரஸ் இத்தொகுதியில் வெற்றி வாகை சூடியது. இதைத்தொடர்ந்து இம்முறையும் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று சிவகங்கை காங்கிரசின் கோட்டை என்பதை நிரூபணம் செய்துள்ளார்.

    • வேளாங்கண்ணியில் தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
    • வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    மேலூர்:

    கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிலர் வேனில் ஆன்மிக சுற்றுலா சென்றனர். இவர்கள் வேளாங்கண்ணியில் தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

    இந்த மேலூர் அருகே தும்பைப்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த குமரி மாவட்டம் களியாக்க விளையைச் சேர்ந்த பயணி ஜஸ்டஸ் (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனின் இடிபாடுகளில் சிக்கி ஸ்மைலா (21), லேடிங் ஜான் (43), ஜல்சா மேரி(43), ராஜகுமாரி (43) உள்பட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.

    தகவல் அறிந்த மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், நெடுஞ்சாலை ரோந்து படை அதிகாரி கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.

    அவர்களால் மீட்க இயலாமல் போகவே உடனடியாக மேலூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த ஜஸ்டஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 

    • 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.
    • 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    மதுரை:

    சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 15-ந்தேதி டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

    இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கில் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் வழங்கிய மதுரை மாவட்ட 6-வது ஜூடிசியல் கோர்ட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    இந்நிலையில், செல்போனில் பேசிய படி கார் ஓட்டிய வழக்கில் நீதிமன்ற உத்தரவுபடி அண்ணாநகர் காவல்நிலையத்தில் கடந்த 3 நாட்களாக கையெழுத்திட்ட நிலையில் நாளை தன்னிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போனுடன் ஆஜராகுமாறு டி.டி.எப். வாசனுக்கு போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். கையெழுத்திட வந்த வாசனிடம் சம்மன் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் மது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் தலைவர் வைகோவின் கருத்து. எங்களுக்கு அதில் எந்தவித சமரசமும் கிடையாது.
    • படிப்படியாக மதுவை குறைத்து மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.

    மதுரை:

    மதுரையில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து?

    பதில்: இதைத்தான் நாங்கள் தேர்தல் களத்திலே கூறினோம். முதல்வரின் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்கள் இந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டதை மக்களிடம் எங்களால் காண முடிந்தது. அதனால் தான் 39 தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தோம். அதைத்தான் கருத்துக்கணிப்பும் தெரிவித்துள்ளது.

    ஆனால் மத்தியில் பா.ஜ.க. கூட்டணி 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வந்துள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளது. அப்போது தெரிந்துவிடும், அதன் பிறகு கருத்து கூறினால் சரியாக இருக்கும்.

    கே: தி.மு.க. ஆட்சியில் சமூக விரோதிகள் சட்டத்தை கையில் எடுக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருக்கிறாரே?

    ப: எதிர்க்கட்சித் தலைவராக ஆளுங்கட்சி மீது கருத்துக்களை கூறுகிறார். போதைப் பொருட்களாக இருக்கட்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்களாக இருக்கட்டும். இவை அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியிலும் நடைபெற்றது. தற்போது எதிர்க்கட்சி என்பதால் அவர் குற்றம் சாட்டுகிறார். அதை பொருட்படுத்த வேண்டாம் என்பது எனது கருத்து.

    கே: ம.தி.மு.க. மதுவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பவர்கள். தற்போதைய நிலை என்ன?

    ப: தமிழ்நாட்டில் மது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் தலைவர் வைகோவின் கருத்து. எங்களுக்கு அதில் எந்தவித சமரசமும் கிடையாது. படிப்படியாக மதுவை குறைத்து மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை.

    கே: யூடியூபர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதே?

    ப: சமூக ஊடகங்களுக்கு சென்சார் போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. அதில் சிலர் வரம்புகளை தாண்டும் போது, யூகங்கள் அடிப்படையில் தவறான செய்திகள் பரப்பப்படும் போது தனிப்பட்ட நபரையோ அவரது குடும்பத்தையோ பாதிக்கிறது. பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு சென்சார் சிப் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளது. சமூக ஊடகங்களில் எளிய மக்களால் பெரிய தவறுகளை கூட வெளியில் கொண்டுவர முடிகிறது. ஆனால் ஒரு தனிப்பட்ட மனிதரையோ அல்லது இயக்கத்தையோ தவறான கருத்துக்களை பரப்புவதற்கு வரைமுறை இருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ஆனால் சவுக்கு சங்கர் குறித்து தனிப்பட்ட முறையில் பேச நான் விரும்பவில்லை.

    கே: சமூக ஊடகங்கள் மூலம் கட்டப்பஞ்சாயத்துகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

    ப: மஞ்சள் பத்திரிகை என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால் ஒரு சில கருப்பு ஆடுகள் அதில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள்தான் அடுத்தவர்களை மிரட்டி காரியம் சாதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். மக்கள் அதை புரிந்து கொண்டு அதை தவிர்ப்பது தான் நல்லது.

    கே: அயோத்தி ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டதால் பா.ஜ.க.விற்கு ஓட்டு சதவீதம் அதிகரிக்குமா?

    ப: தேர்தல் களத்திலோ அல்லது அரசியலிலோ விவாதம் என்பது மக்களை சார்ந்த விஷயமாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை, கல்வி, மருத்துவம் போன்ற விஷயங்களை வைத்து மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தேர்தலை பொருத்தவரை மத்திய அரசு 10 ஆண்டுகளில் என்ன செய்தார்கள் என்பதைக் குறித்து பேசவேண்டும். மக்களுக்கான அடிப்படை பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்.

    ஆனால் இதைப் பற்றி பேசாமல் மதத்தைப் பற்றியோ, சாதியைப் பற்றியோ பிரிவினை உண்டாக்கக்கூடிய பேச்சுகள்தான் இருந்தது. நானும் ஒரு இந்து தான், கடவுளை வழிபடுபவன் தான். ஆனால் அரசியல் என்பது மதங்களை தவிர்த்து மக்களுக்கான பிரச்சனைகளை குறித்த விவாதம் தான் இருக்க வேண்டும். முடிவுக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது.

    இந்தியா கூட்டணியில் எங்களுடைய விவாதங்களை முன் வைத்தோம், பா.ஜ.க. அவர்கள் விவாதத்தை முன் வைத்தார்கள். மக்களின் முடிவு என்பது தேர்தலுக்குப் பிறகுதான் வட இந்தியாவில் சொல்ல முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவர்கள், விவசாயிகள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
    • தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 5,00,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

    சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் மிக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. தமிழ்நாட்டில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

    அந்த வகையில் மதுரை மாவட்டம், அழகர் கோவிலில் உள்ள மகாத்மா காந்தி பள்ளியில் நடைப்பெற்ற இதன் தொடக்க விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதல் மரக்கன்றை நட்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இவ்விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் மகாத்மா மான்டசரி பள்ளியின் நிர்வாகிகள் கார்த்திக், ஹம்ச பிரியா ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


    இவ்விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் பேசுகையில், "இன்றைய காலத்தில், எது பலன் தரக்கூடிய பணப்பயிர் என்பதை அறிந்து நட்டு வளர்த்தால் அது பயிர் விவசாயத்தை விட பல மடங்கு வருவாயை தரும். எனவே இப்போது தரப்படுகிற இந்த மரக்கன்றுகளை வளர்த்து உருவாக்கிவிட்டால் அதன் மூலமாக வரக்கூடிய வருவாய் மிகப்பெரிய அளவில் உயரும். வருவாயோடு சுற்றுச்சூழலும் முக்கியம் என்கிற வகையில் வழங்குப்படும் மரக்கன்றுகளை உங்கள் வீடுகளில், முடிந்த இடங்களில் எல்லாம் நட்டு வைக்க வேண்டும். இது பார்க்க எளிமையான நிகழ்வாக இருந்தாலும், மக்களுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்வாக இது இருக்கிறது. காலத்தின் சூழ்நிலை, நாட்டின் எதிர்காலம் இவை அனைத்தையும் மனதில் வைத்து நடத்தப்படும் இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துகள்" எனக்கூறினார்.

    இவ்விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள், விவசாயிகள் மற்றும் ஈஷா தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு மதுரை மாவட்டத்தில் மட்டும் 4,78,543 மரங்களும், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.

    மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • முதல் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் நேரில் வந்த டி.டி.எப்.வாசன் கையெழுத்திட்டார்.
    • அண்ணா நகர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த டி.டி.எப்.வாசனை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

    மதுரை:

    சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 15-ந்தேதி டி.டி.எப்.வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கி அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

    இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீசார் டி.டி.எப்.வாசனை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கில் டி.டி.எப்.வாசனுக்கு ஜாமின் வழங்கிய மதுரை மாவட்ட 6-வது ஜூடிசியல் கோர்ட்டு 10 நாட்களுக்கு மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

    அதன்படி முதல் நாளான இன்று மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களுடன் நேரில் வந்த டி.டி.எப்.வாசன் கையெழுத்திட்டார். அப்போது வழக்கு விசாரணைக்காக டி.டி.எப்.வாசனின் செல்போனை 3 நாட்களுக்குள் மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டுமென போலீசார் நேரில் நோட்டீஸ் வழங்கினர்.

    அண்ணா நகர் காவல் நிலையத்திலிருந்து வெளியே வந்த டி.டி.எப்.வாசனை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கேட்டனர். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்திட வந்துள்ளதால் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டாம் என டி.டி.எப்.வாசனும், அவரது வழக்கறிஞர்களும் அறிவுறுத்தினர்.

    • செல்போன் பேசி கொண்டே டி.டி.எப். வாசன் கார் ஓட்டிய வீடியோ வைரலானது.
    • வாசனுக்கு முதுகுவலி உள்ளது, கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும்.

    செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் டிடிஎப் வாசனை காவல்துறையினர் கைது செய்தனர்.செல்போன் பேசி கொண்டே டிடிஎப் வாசன் கார் ஓட்டிய வீடியோ வைரலாக நிலையில் காவல்துறை நடவடிக்கையை எடுத்துள்ளது.

    இவர் மீது ஏற்கனவே வேகமாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பிறருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையில் ஒரு காரியத்தை செய்தல் என மற்றொரு பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற வளாகத்திற்கு டிடிஎப் வாசன் போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டார். அப்போது, "வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது, அதனால் யாரும் கெட்டுப் போகவில்லையா? என்னை பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கு நீதி வேண்டும்" என்று டிடிஎப் வாசன் கூச்சலிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கின் விசாரணையில் டிடிஎப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "டிடிஎப் வாசனால் எந்தவொரு தனிமனிதனும் பாதிக்கவில்லை, புகாரும் அளிக்கவில்லை எனவும் சென்னையில் இருந்து சென்ற போது எந்த காவலரும் விதிமீறல் குறித்து பார்க்கவில்லையா? காவலர் கொடுத்த புகாரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாசனுக்கு முதுகுவலி உள்ளது, கண்ணாடி அணிந்து தான் வெளியே செல்ல முடியும். வரும் 4ஆம் தேதி சினிமா பட சூட்டிங் உள்ளது, எனவே நிபந்தனை ஜாமின் வழங்க வேண்டும்" என்று தனது வாதத்தை முன்வைத்தார்.

    கார் ஓட்டுநர் உரிமம் பெற LLR மட்டுமே வைத்துள்ள டிடிஎப் வாசன், தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்கியுள்ளார் என்று அரசுத்தரப்பு வாதம் முன்வைத்தது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டிடிஎப் வாசனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இனி இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கோரி டிடிஎப் வாசன் வீடியோ வெளியிட வேண்டும் எனவும் அதனை கடிதம் வாயிலாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். 

    • கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.
    • கல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர்:

    தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு அணை தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக உள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த முல்லை பெரியாறு அணை குறித்து கேரள அரசு பொய்பிரசாரம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு தீவிர முயற்சி எடுத்துள்ளது. அதற்கு அனுமதி பெறுவதற்காக அம்மாநில அரசு மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்திருந்தது.

    கேரள அரசின் இந்த செயலை தமிழக அரசு மற்றும் முக்கிய அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கேரள அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது.

    மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெரியாறு பாசன கால்வாய் மூலம் சுமார் 1 அரை லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் அடைந்து வருகின்றன. இதற்கிடையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து இன்று மேலூர் பஸ் நிலையம் அருகில் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் முருகன் கேரள அரசை கண்டித்தும், மத்திய அரசு புதிய அணைக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலூர், வெள்ளலூர், திருவாதவூர், சூரக்குண்டு, கல்லம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்கு ஜாமின் கேட்டு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார்.
    • மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்து இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

    அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கடந்த 4-ந்தேதி அதிகாலையில் கைது செய்தனர். அவரை கோவை சிறையில் அடைத்தனர்.

    இதேபோல தேனியில் அவர், தனது உதவியாளர், டிரைவருடன் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர். அந்த வழக்கில் சவுக்கு சங்கரை கைது செய்து, மதுரை மாவட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

    இந்த நிலையில் அந்த வழக்கில் தனக்கு ஜாமின் கேட்டு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்து ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை வாபஸ் பெறுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • தமிழக அரசின் திட்டங்களும் உதவியாக உள்ளன.
    • பட்டம் பெற்ற பிறகு தொடர்ந்து சட்டம் பயில விரும்புகிறேன்.

    மதுரை:

    உயர்கல்வி பயின்று சமூகத்தில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் தணியாத வேட்கை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் எல்லோருக்கும் இந்த விருப்பம் நிறைவேறும் என்பதில் உறுதியில்லை.

    குறிப்பாக உயர்கல்வி படிப்பதற்கு ஆண்கள், பெண்களுக்கு போதிய வாய்ப்புகள் இருந்தபோதிலும் மூன்றாம் பாலித்தனவர் என்று கூறப்படும் திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோருக்கான வாய்ப்பு என்பது இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது.

    தற்போது சமூகத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகளிலும், கல்வி கூடங்களிலும், இதர தனியார் நிறுவனங்களிலும் அவர்களுக்கான வாய்ப்புகளும், உரிமைகளும் மெல்ல மெல்ல கிடைக்க தொடங்கி உள்ளன. இதற்கு தமிழக அரசின் திட்டங்களும் உதவியாக உள்ளன. குறிப்பாக திருநங்கைகள் சமூகத்தில் இதர பாலினத்தவரைபோல இயல்பாக கலந்து செயல்படும் வகையில் அனைவருக்கும் மனமுதிர்ச்சி ஏற்படவில்லை.

    இதனால் அவர்கள் சமூகத்தில் பல்வேறு தடைகளையும், அவமானங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்டவற்றில் உரிய இடத்தை அடைய முடியாத நிலையும் நீடிக்கிறது.

    இந்த சூழலில் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த மஸ்தானி என்ற திருநங்கை ஒருவர் தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றி உயர் கல்வி பயில்வதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் இணைந்துள்ளார். இந்த அனுபவம் குறித்து மஸ்தானி கூறுகையில், நான் 10-ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது எனது உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் என்னால் இயல்பாக பிறருடன் பழக இயலாத நிலை ஏற்பட்டது.

    இதை நான் கூறிய போது எனது குடும்பத்தினரும் என்னை தனிமைப்படுத்தினர். ஒரு கட்டத்தில் நான் என்னை திருநங்கையாக உணர தொடங்கினேன். அதே நேரத்தில் 12-ம் வகுப்பு கடந்த 2019-ம் ஆண்டு 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி ஆனேன். ஆனால் என்னை திருநங்கையாக மாற்றிக்கொள்வதற்கு குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை. இதனால் என்னால் மேல்படிப்பு படிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

    ஒருகட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகள் சமூகத்தினருடன் இணைந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டது என்றார். ஆனால் அதே நேரத்தில் அவருக்கு உயர்கல்வி பயில வேண்டும் என்ற ஆர்வம் தொடர்ந்து இருந்துள்ளது. அவருக்கு கைகொடுக்க மாற்று பாலினத்தவர் ஆதார மையம் முன்வந்தது.

    ஏற்கனவே திருநங்கையாக மாறி சமூகத்தில் பல்வேறு இடர்பாடுகளையும் சந்தித்து இன்றைக்கு தனித்துவ ஆளுமையாக உயர்ந்துள்ள பிரியா பாபு என்பவர் மாற்று பாலினத்தவர் ஆதார மையத்தை நிறுவி, இதுபோன்று திருநங்கைகளாகவும், மாற்று பாலினத்தவராகவும் மாறி வாழ்க்கையில் போராடி கொண்டிருக்கும் நபர்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள், அரசின் சலுகைகள், அடையாள அட்டை, ரேசன் கார்டு போன்ற பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து மஸ்தானிக்கும் உயர்கல்வி பயில்வதற்கு அந்த ஆதார மையம் முயற்சி மேற்கொண்டது. இதுகுறித்து அதன் நிறுவனர் பிரியா பாபு கூறுகையில், மஸ்தானி தொடக்கத்தில் மாற்று பாலினத்தவரோடு இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று கொண்டிருந்தார். அவருடைய லட்சியமான உயர் கல்வி பயில்வதற்கு உதவ எங்களது நிறுவனம் முன் வந்தது. நாங்கள் அவர் கல்வி பயில நிதி உதவி செய்ய முயன்றோம்.

    மேலும் அவர் தனது புதிய அடையாளத்துடன் கல்லூரியில் இணைந்து பயில்வதற்கான முயற்சியை செய்தோம். இதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி நிர்வாகத்திடம் பேசியபோது அவர்கள் மிகவும் ஆர்வத்தோடு ஆதரவு அளிக்க முன்வந்தனர். மஸ்தானி உயர்கல்வி பயில்வதற்கு நிச்சயம் உதவுவோம் என உறுதி அளித்தனர். இது குறித்து மஸ்தானி மேலும் கூறுகையில், மாற்று பாலினத்தவர் ஆதார மையத்தின் முயற்சியில் காரணமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி நான் பி.ஏ. (பொருளாதாரம்) படிப்பதற்கு அனுமதி அளித்துள்ளது.

    நான் உயர்கல்வி பயில வேண்டும் என்பது தான் எனது தாயாரின் ஆசையாகும். ஆனால் திருநங்கையாக மாறிய பிறகு குடும்பத்தினரின் உதவி இல்லாத நிலையில் மாற்று பாலினத்தவர் ஆதார மையத்தின் மூலமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பயில்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பட்டம் பெற்ற பிறகு தொடர்ந்து சட்டம் பயில விரும்புகிறேன்.

    தற்போது நான் உயர் கல்வி படிப்பது எனது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி அடைந்த போதிலும் என்னை அவர்களோடு சேர்த்து கொள்ள விருப்பம் இல்லை. அதே நேரத்தில் கல்லூரியில் பெண்கள் விடுதியில் தங்கி பயில நிர்வாகம் அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    சமூகத்தில் மாற்று பாலினத்தவர் தற்போது காவல் துறை அதிகாரிகளாகவும், இந்திய ஆட்சிப்பணித்துறை அதிகாரிகளாகவும் உயர்ந்து வருகின்றனர். மஸ்தானி போன்ற மாற்று பாலினத்தவர் உயர்கல்வியும், சட்டமும் பயின்று அனைத்து மாற்று பாலினத்தவர் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட முன்வரும் போது இன்னும் கூடுதலான வாய்ப்புகளும், தன்னம்பிக்கையும் மாற்று பாலினத்தவர்களுக்கு ஏற்படும் என்பது நிதர்சனம். பாலியல் பேத மற்ற வகையில் அதற்கான வழியை உருவாக்கி கொடுக்க வேண்டியது சமூகத்தில் உள்ள அனைவரின் கடமையாகும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

    • டிடிஎப் வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார்.
    • அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவுசெய்து வருகிறார்.

    மதுரை:

    பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனையில் படுத்துக்கிடந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அதன்பின், டிடிஎப் வாசன் புழல் சிறையில் இருந்து கடந்த நவம்பரில் ஜாமினில் வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டு ரத்துசெய்து உத்தரவிடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, சமீபத்தில் ஹைவேயில் கார் ஓட்டிச்சென்ற டிடிஎப் வாசன், தான் கம்பேக் கொடுத்துவிட்டேன் என ரசிகர்களுக்காக வீடியோ வெளியிட்டிருந்தார். தொடர்ந்து வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்தும் வருகிறார்.

    இந்நிலையில், பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் மதுரை அண்ணாநகர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக, கடந்த 15-ம் தேதி இரவு 7.50 மணிக்கு மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை அஜாக்கிரதையாகவும், கவனக் குறைவாகவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவதும், அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவுசெய்து யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.

    இதுகுறித்து மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் டி.டி.எப். வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×