என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மரவள்ளி கிழங்கு ஒரு டன் ரூ.16 ஆயிரத்துக்கு விற்பனை
- மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங் கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர்.
- ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரச பாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிரா மணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டு உள்ளது.
இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம் பள்ளி, மலவேப்பங் கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர்.
ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அள வில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று ரூ.13 ஆயிரத்துக்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து, ரூ.14 ஆயிரத்துக்கு விற்கிறது.
அதே சமயத்தில் சிப்சுக்கு பயன்படுத்தும் மரவள்ளிக்கிழங்கு கடந்த வாரம் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு, 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து, ரூ.16ஆயிரத்துக்கு விற்கிறது.
மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், கடந்த வருடம் மரவள்ளி கிழங்கு பயிர் நோய் தாக்கு தலால் சேதம் அடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. அதனால் நடப்பாண்டு குறைந்த அளவே மரவள்ளிக்கிழங்கு பயிர் சாகுபடி செய்துள்ளனர். மேலும் ஜவ்வரிசி விலை உயர்ந்து கொண்டே வருவதால் மரவள்ளி கிழங்கு விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
தற்போது பரமத்தி வேலூர் பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அறுவடை பெரும்பாலும் முடிந்து விட்டது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் மரவள்ளி கிழங்கு வாங்கி ஜவ்வரிசி ஆலைக்கு சப்ளை செய்கிறோம். நடப்பாண்டு மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு எதிர்பார்க்காத அளவு லாபம் கிடைத்துள்ளது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்