search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றம்
    X

    கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றபோது எடுத்தபடம்.

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மக பெருவிழா கொடியேற்றம்

    • கொடி மரத்திற்கு பால், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • மாசி மக பெருவிழா வருகிற 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள மிகப் பழமையான கோவிலான காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று காலை சுவாமி காசி விஸ்வநாதர் , அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொடர்ந்து கொடி மரத்திற்கு பால், சந்தனம் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் , தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களின் பக்தி நமசிவாய கோஷத்துடன் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.

    மாசி மக பெருவிழாவின் முதல்நாள் விழாவான கொடியேற் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று தொடங்கிய மாசி மக பெருவிழா வருகிற 6-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும். இதில் நாள்தோறும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற உள்ளது. மேலும் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 5-ந் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறுகிறது.

    Next Story
    ×