என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றம்
- வென்னிமலை முருகன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
- விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற வென்னிமலை முருகன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டா டப்பட்டு வருகிறது.
இதில் முக்கிய திருவிழாவான மாசி திரு விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.
இதையொட்டி கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
கொடியேற்ற விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அனைத்து சமுதாய மக்களாலும் கொண்டா டப்படும் இத்திருவிழா 11 நாட்கள் நடை பெறுகிறது. நாள்தோறும் சுவாமி முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. நிறைவு நாளான 11-ம் திருநாளில் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து பூஞ்சப்பர காட்சி மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடை பெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வரு கின்றனர்.