search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கணித திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம்
    X

    மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கணித திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம்

    • கணிதத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • கிருஷ்ணகிரி சரக உருது வட்டார கல்வி அலுவலர் பயாஸ் வரவேற்புரை யாற்றினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கோட்டை நகராட்சி பெண்கள் நடுநிலைப்பள்ளியில், மாவட்ட உருது சரக தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு உருது அகாடமி மற்றும் இந்தியன் அபாகஸ் இணைத்து கணிதத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி சரக உருது வட்டார கல்வி அலுவலர் பயாஸ் வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு உருது அகாடமி துணைத் தலைவர் டாக்டர். நயிமுர் ரஹ்மான் மற்றும் இந்தியன் அபாகஸ் நிறுவன சேர்மேன் மற்றும் நிர்வாக இயக்குநர் பஷீர்அகமது, கிரிஸ் குளோபல் சர்வீஸஸ் இயக்குநர் டாக்டர். சாலமன், தமிழ்நாடு அரசு உருது அகாடமி உறுப்பினர்கள் அப்துல்கனி, அக்மல்பாஷர் ஆகியோர் சரக உருது துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அபாகஸ் அடிப்படையிலான எண் கணிதம் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு செய்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தவுலதாபாத் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) யாரப்பாஷா, கோட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) பஷீராபேகம், ஆசிரிய, ஆசிரியர்கள் சாந்தி, ஹசீன்தாஜ், உசேன்பானு, ரியாஜின்னிஸா, வின்சென்ட்பால்ராஜ், சத்துணவு அமைப்பாளர் ராதிகா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×