search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகரில் 4 மண்டலங்களிலும் மேயர் அதிரடி ஆய்வு
    X

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்த காட்சி.

    தூத்துக்குடி மாநகரில் 4 மண்டலங்களிலும் மேயர் அதிரடி ஆய்வு

    • தூத்துக்குடியில் சில பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் மந்த நிலையில் இருப்பதாக புகார்கள் வந்தன.
    • தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ் குமாருடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள 60 வார்டுகளிலும் மாநகராட்சி சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்த புதிய சாலைகள் வடிகால்கள் என பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகரம் முழுவதும் புதிய வடிகால்கள் புதிய சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு செயல்ப டுத்தப்பட்டும் வருகிறது,

    இந்நிலையில் சில பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் மந்த நிலையில் இருப்பதாக புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் தினேஷ் குமாருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அரசு அலுவலர்களுடன் மாநகரின் 4 மண்டல பகுதிகளிலும் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறுகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் அறிவித்த படி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்பட்டு சாலை மற்றும் மக்கள் வசிப்பிடங்களின் மழைநீர் தேங்காதபடி பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய 4 மண்டலங்களிலும் அரசு அலுவலர்களுடன் நேரடியாக சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.

    அப்போது அறிவிக்கப் பட்ட பணிகள் எந்த அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் கேள்வி எழுப்பினார்.மேலும் மழைக்காலம் தொடங்கும் முன்பாக ஒப்பந்தம் பெற்று எடுத்துக்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுகுறித்து உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார். ஆய்வின் போது ரவீந்திரன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×