search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேதாரண்யம் அரசு கல்லூரியில் எம்.பி.ஏ. வகுப்பை மீண்டும் தொடங்க வேண்டும்
    X

    வேதாரண்யம் அரசு கல்லூரியில் எம்.பி.ஏ. வகுப்பை மீண்டும் தொடங்க வேண்டும்

    • 1,100 மாணவிகள் பட்டப்படிப்பு படித்து வருகின்றனர்.
    • எம்.பி.ஏ படிப்பதற்கு நீண்டதூரம் சென்று அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பாரதிதாசன் மாதிரி உறுப்பு கல்லூரி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இக்கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்.சி., போன்ற பட்ட படிப்புகள் உள்ளன.

    மேலும், இக்கல்லூரியில் கடந்த 2014-ம் ஆண்டு எம்.பி.ஏ வகுப்புகள் தொடங்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு வரை நடைபெற்றது.

    இதில் 240 மாணவர்கள் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு இக்கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. மேலும், கடந்த ஆண்டு முதல் இக்கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு நிறுத்தப்பட்டது.

    இக்கல்லூரியில், தற்போது 1,270 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    அதில் 1,100 மாணவிகள் பட்டப்ப டிப்பு படித்து வருகின்றனர்.

    கிராமப்புறத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் இக்கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு நிறுத்தப்பட்ட தால் இங்கு பயிலும் மாணவ- மாணவிகள் எம்.பி.ஏ படிப்பதற்கு நீண்டதூரம் சென்று அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    எனவே, கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி மீண்டும் இக்கல்லூரியில் எம்.பி.ஏ. பாடத்தை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×