என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிதம்பரத்தில் இன்று வியாபாரிகள் கடை அடைப்பு
- சிதம்பரத்தில் இன்று வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
- 50 கடைகளை மட்டும் மாற்றினால் இரு இடங்களில் மார்க்கெட் செயல்படுவதால் இரு இடங்களில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
கடலூர்:
சிதம்பரம் மேலவீதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் காய் கனி மார்க்கெட்டின் முன்புறம் நகராட்சி இடத்தில் இயங்கிவரும் 72 கடைகளை மட்டும் உழவர் சந்தை இயங்கிவந்த அண்ணா கலையரங்கிற்கு மாற்றப்பட உள்ளது.
எனவே நகராட்சியின் திட்டத்தை கைவிடக்கோரி முதல்கட்டமாக அண்ணா கலையரங்கத்தில் உழவர் சந்தை அமைத்து மக்கள் யாரும் செல்லவில்லை. தற்போது அங்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வேளாண் விற்பனை துறை அலுவலகம், வாடகை கார், வேன் நிறுத்தும் இடமாக உள்ளது.
தற்போது உள்ள மார்க்கெட் பின்புறம் சொந்த இடத்திலும்,வக்போர்டுக்கு சொந்தமான இடத்திலும் இயங்கும் சுமார் 100 கடைகளும் வழக்கம்போல் இயங்கும் நிலையில் முன்புறம் உள்ள சுமார் 50 கடைகளை மட்டும் மாற்றினால் இரு இடங்களில் மார்க்கெட் செயல்படுவதால் இரு இடங்களில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.
இதனால் பின்புறம் உள்ள கடைகளுக்கு லாரிகளில் வரும் பொருட்களை ஏற்றி இறக்க ஏற்படும் சிரமங்கள் உருவாகும். பொதுமக்கள் ஒரே இடத்தில் காய், கனி, பூ, மளிகை பொருட்களை பார்த்து வாங்க கூடிய நிலை இல்லாமல் ஆங்காங்கே அலையவேண்டிய நிலை இருக்கும். எனவே நகராட்சியின் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இன்று முதல் கட்டமாக 24 மணிநேர கடையடைப்பு போராட்டமும் அதனை தொடர்ந்து பின்னர் காலவரையற்ற கடையடைப்பு போராட்ட மும் நடைபெறும் என காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று சிதம்பரம் நகரில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.