என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு வெளிமாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கு வரத்து அதிகம்
- உருளைக்கிழங்கு மண்டிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
- ஊட்டியிலிருந்து 10 டன் எடையுள்ள 4 முதல் 6 லோடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் மைதானம் பகுதியில் ஏராளமான உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.இங்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்தும், உத்தரபிரதேசம்,குஜராத், கர்நாடகா மாநிலம் கோலார்,மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் உருளைக்கிழங்குகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதனை வியாபாரிகள் ஏலம் முறையில் எடுத்துச் சென்று விற்பனை செய்வது வழக்கம்.
இந்த உருளைக்கிழங்கு மண்டிகளில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் போதிய சீசன் இல்லாத காரணத்தால் தற்போது ஒரு நாளைக்கு தலா 10 டன் எடையுள்ள 4 முதல் 6 லோடுகள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
மேலும்,உத்தரப்பிரதேசம்,குஜராத்,மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தலா 15 முதல் 20 டன் எடையுள்ள சுமார் 25 லோடு உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து தலா 15 முதல் 20 டன் எடையுள்ள சுமார் 20 லோடு உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.
தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் 45 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1500 க்கும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் உருளைக்கிழங்குகள் 45 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.750 முதல் 850 வரை விற்பனையாகிறது. இதனால் ஊட்டி உருளைக் கிழங்குகளின் விலை அதிகமாகவும், வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகளின் விலை குறைவாகவும் விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கொண்டு வரப்படும் உருளைக்கிழங்குகள் விளைச்சல் குறைவாக இருந்தாலும் போதுமான விலை கிடைப்பதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்