என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் மினி லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
- செக்போஸ்ட் ரவுண்டானா பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது.
- மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர் வினித் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பெரியகோட்டையில் இருந்து ஒரு மினிலாரி விறகு ஏற்றிக்கொண்டு ஒட்டன்சத்திரம் வந்தது. மினி லாரியை வினித் (வயது 27) என்பவர் ஓட்டி வந்தார்.
திண்டுக்கல் சாலையில் உள்ள செக்போஸ்ட் டவுண்டானா பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் மினிலாரியை ஓட்டி வந்த டிரைவர் வினித் காயங்களுடன் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செக்போஸ்ட் டவுண்டா னா அருகே மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பாக ஏற்கனவே இருந்த சாலையின் மேல் பகுதியில் புதிய சாலை அமைக்க ப்பட்டது.
இதனால் சாலையின் இரு பக்கமும் பெரிய பள்ளம் உள்ளது. வாகன ங்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியா மல் கீழே விழுந்து காய மடைவது தொடர்கதையாகி வருகிறது.
இதே இடத்தில் மினி லாரியும் கவிழ்ந்துள்ளது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியு ள்ளது. எனவே முறையாக சாலையை சீரமைக்க நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.