என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மழைநீர் சூழ்ந்த வயல்களில் எம்.எல்.ஏ. ஆய்வு
Byமாலை மலர்18 Nov 2023 3:21 PM IST
- சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.
- மழைநீர் முழுவதும் வடிவதற்கு வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடி ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்தது .இதனால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வந்தனர்.
அதேபோல் சம்பா,தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.மழையால் பாதிக்கப்பட்ட பகுதியினை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மழைநீர் முழுவதும் வடிவதற்கு வடிகால்களை சீரமைக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.எஸ்.சரவணன்,இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி, ஊராட்சி செயலர் இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story
×