என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எட்டயபுரம் அருகே மொபட்- மோட்டார் சைக்கிள் மோதல்; வியாபாரி பலி- 2 மகன்களுக்கு தீவிர சிகிச்சை
- முத்துமாரியப்பன் எட்டயபுரம் மெயின் பஜாரில் பலசரக்கு கடை நடத்தி வந்தார்.
- விபத்தில் சம்பவ இடத்திலேயே முத்துமாரியப்பன் பலியானார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் நடுவிற்பட்டியை சேர்ந்தவர் முத்துமாரியப்பன் (வயது 42). இவர் எட்டயபுரம் மெயின் பஜாரில் பலசரக்கு கடை நடத்தி வந்தார்.
வியாபாரி பலி
இந்நிலையில் நேற்று தனது 2 மகன்களை டியூசனிலிருந்து வீட்டுக்கு அழைத்து கொண்டு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். வீட்டின் அருகே உள்ள வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் முத்துமாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயம் அடைந்த அவரது 2 மகன்களையும் எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர கிகிச்சை அளிக்க்பபட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
எதிரே வந்து விபத்து ஏற்படுத்திய பசுவந்தனை ராஜூ நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வகுமார் (வயது 19) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.