search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் திருவிழாக்களால் களை கட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை
    X

    அய்யலூர் சந்தையில் கூடிய விவசாயிகள், வியாபாரிகள்.


    கோவில் திருவிழாக்களால் களை கட்டிய அய்யலூர் ஆட்டுச்சந்தை

    • வடமதுரை, அய்யலூர் பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • இதனால் ஆடு, கோழிகள் வாங்க அய்யலூர் சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர்

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவ ட்டம் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடி வருகிறது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கால்நடைகள், காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வந்து கால்நடைகளை வாங்கிச் செல்கின்றனர்.

    கோவில் திருவிழாவுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் கிராமங்களில் அதிக அளவில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள்தங்கள் வேண்டுதல் நிறைவேறி யவுடன் கிடா வெட்டு தல் உள்ளிட்ட நேர்த்திக்க டன்களை செலுத்தி வரு கின்றனர்.

    இதனால் அய்யலூர் சந்தையில் அதிக அளவு வியாபாரிகள் வந்தனர். மேலும் ஆடு மற்றும் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கோவில் திருவிழாக்களில் பெரும்பாலும் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவதால் சந்தையில் கிடா அதிக அளவில் விற்பனையானது. எடை மற்றும் தரத்துக்கு ஏற்ப ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது. நாட்டுக்கோழி 1 கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விலை கேட்கப்பட்டது. மேலும் செம்மறி ஆடுகள் மற்றும் சேவல்களும் அதிக அளவு விற்கப்பட்டன.

    வாரம் தோறும் கூடும் அய்யலூர் சந்தையில் குடிநீர் மற்றும் மின் விளக்கு வசதி இல்லாததால் வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் ஆடு வாங்க வரும் வியாபாரிகள் பணத்தை ஒரு வித அச்சத்துடனேயே கொண்டு வருகின்றனர். இருளை பயன்படுத்தி மர்ம நபர்கள் கை வரிசை காட்டி வருகின்றனர்.

    எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




    Next Story
    ×