search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கிநாயனப்பள்ளியில்  அரசு மாணவிகள் விடுதி  -கலெக்டர் திறந்து வைத்தார்
    X

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அங்கிநாயனபள்ளி ஊராட்சியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன் முன்னிலையில் திறந்து வைத்து மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    அங்கிநாயனப்பள்ளியில் அரசு மாணவிகள் விடுதி -கலெக்டர் திறந்து வைத்தார்

    • 100 மாணவிகள் தங்கும் வகையில் கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது.
    • சிக்கன், மட்டன், முட்டையும், பண்டிகை கால சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அங்கிநாயனப்பள்ளியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 100 மாணவிகள் தங்கும் வகையில் கல்லூரி மாணவிகள் விடுதி கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். பர்கூர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி விடுதியை திறந்து வைத்து கலெக்டர் பேசியதாவது:-

    44 விடுதிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப் பட்டோர்மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 35 பள்ளி விடுதிகளும், 9 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 44 விடுதிகள் இயங்கி வருகிறது. கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை வேண்டி அதிகளவில் விண்ணப்பங்கள் வரப்பெறுவதால் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, பர்கூர் தாலுகாவில் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி 100 மாணவிகள் எண்ணிக்கையுடன் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து பர்கூர் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் விடுதி இன்று தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் துவங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு தினமும் புதிதாக மாற்றப்பட்ட உணவுப்பட்டியலின்படி காலை மற்றும் இரவு உணவாக இட்லி, இடியாப்பம் , பூரி, பொங்கல், சப்பாத்தி, தோசையும், மதிய உணவாக சாதம், சாம்பார், ரசம், கூட்டு, சிக்கன், மட்டன், முட்டையும், பண்டிகை கால சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.

    மேலும் கல்லூரி விடுதிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டுதோறும் இலவசமாக ஜமுக்காளம், ஆண்டுக்கு 3 முறை இலவச மருத்துவ பரிசோதனையும், பற்பசை, சோப்பு, எண்ணெய் போன்றவை வாங்க கல்லூரி மாணவிகள் ஒருவருக்கு மாதம் ரூ.150-ம், மாணவிகள் தினமும் படிக்க செய்தித்தாள்களும், கலை திருவிழா மற்றும் மாணவிகள் போட்டி தேர்வில் தேர்ச்சி பெறு ஏதுவாக புதியதாக செம்மொழி நூலகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கதிரவன், பர்கூர் பேரூராட்சி தலைவர் சந்தோஷ், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலன், பேரூராட்சி உறுப்பினர் கார்த்திகேயன், தாசில்தார் பன்னீர்செல்வி, பர்கூர் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×