என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நாங்குநேரியில் நின்று செல்லும்
- நாகர்கோவிலில் இருந்து நெல்லை, கோவில்பட்டி, கல்யாண், தானே வழியாக மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
- இன்று முதல் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் ரெயில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.
களக்காடு:
நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருத்தணி, ரேணிகுண்டா, குண்டக்கல், கடப்பா, வாடி, புனே, கல்யாண், தானே வழியாக மும்பைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும் என்று நாங்குநேரி தாலுகா பகுதி பொதுமக்கள் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து இந்த ரெயில் இன்று முதல் நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை நாகர்கோவில்-மும்பை ரெயில் நாங்குநேரியில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றது. இந்த ரெயிலுக்கு நாங்குநேரி பகுதி பொதுநல அமைப்பினர், அரசியல் கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.