என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை
- பரமத்தி வேலூர் தாலுகா குன்னத்தூர் ஊராட் சிக்கு உட்பட்ட எட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த குன்னத் தூர் மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
- மகா மாரியம்மன் கோவிலில் மண்டலா பிஷேகம் தினந்தோறும் சிறப்பு பூஜைகளுடன் தொடர்ந்து நடந்து வந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குன்னத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட எட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த குன்னத்தூர் மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மகா மாரியம்மன் கோவிலில் மண்டலா பிஷேகம் தினந்தோறும் சிறப்பு பூஜைகளுடன் தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் மண்டலாபி ஷேக 48 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மேள தாளங்கள் முழங்க தீர்த்த குடங்களுடன் ஊர்வல மாக கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அக்கினி குண்டம் அமைக்கப்பட்டது. 108 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு சங்கு களுக்கு புனித நீர் ஊற்றி மலர்கள் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி ஹோமம் செய்தனர்.மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. அபிஷேகத்தை முன்னிட்டு மகா மாரி யம்மனுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.