search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்ககாலி இடத்தில் நிறுத்தி வாகனங்கள் ஆய்வு
    X

    பரமத்தியில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்ககாலி இடத்தில் நிறுத்தி வாகனங்கள் ஆய்வு

    • பரமத்தி - வேலூர் செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள்வதற்கென தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

    போக்குவரத்து பதிப்பு

    புதிய வாகன பதிவு மற்றும் தரச் சான்றிதழ் பெற வரும் கனரக வாகனங்களை பரமத்தி - வேலூர் செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்வதால் போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இங்கே தினசரி வாகன ஓட்டுனர் உரிமம் பெற மற்றும் பழகுனர் உரிமை பெற வருகின்றனர்.

    இதனால் சேலம், கரூர் செல்லும் தனியார் பஸ்கள் பரமத்தி நகருக்குள் நுழைவதை தவிர்த்து பைபாஸ் சாலையிலே சென்று விடுகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த வட்டார போக்கு வரத்து அலுவலகத்திற்கு வாகன ஆய்வு மேற்கொள்வதற்கென தனி இடம் ஒதுக்கப்படாமல் உள்ளதால் சாலை ஓரத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளது.

    பரமத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவல கத்திற்கு என சொந்த கட்டிடம் கட்டுவதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ள நிலையில் விரைவில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு அப்பகுதியில் ஆய்வுக்கான தனி இடம் அமைக்கப்படும் எனவும் அதுவரை பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு பணிகள் மேற் கொள்ளப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் கூறியி ருந்தார்.

    தற்போது பரமத்தி மோட்டார் வாகன ஆய்வா ளர் அலுவலக ஆய்விற்காக வரும் வாகனங்கள் அலுவ லகத்தின் அருகில் உள்ள காலி இடங்க ளில் நிறுத்தப்பட்டு போக்கு வரத்திற்கு எவ்வித இடையூறும் இன்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×