என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தி.மு.க. இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம்
- நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று மாவட்ட அவை தலைவர் மணிமாறன் தலைமையில் நாமக்கல்லில் நடந்தது. வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
- நாமக்கல் மாவட்டத்தில் ரூ.140 கோடியில் போதமலைக்கு சாலை அமைக்கின்ற திட்டம், ரூ.190 கோடி மதிப்பில் நாமக்கல் புறவழிச்சாலை திட்டம் என 2 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இது எந்த அரசியல் கட்சியாலும் செய்ய முடியாத திட்டமாக அமைந்து உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று மாவட்ட அவை தலைவர் மணிமாறன் தலைமையில் நாமக்கல்லில் நடந்தது. வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்–போது அவர் கூறியதாவது:-
வருகிற டிசம்பர் மாதம் 17-ந் தேதி சேலத்தில், இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடக்கிறது. அதில் பங்கேற்கும் இளைஞரணி பட்டியல் இறுதி செய்யப்பட்டதில், தமிழகத்திலேயே அதிக அளவில் பெயர் கொடுத்த முதல் 2 மாவட்டங்களில் ஒன்று நாமக்கல், மற்றொன்று சேலம்.
இதையொட்டி வருகிற 18-ந் தேதி காலையில் சேலத்தில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதியம் நாமக்கல் மாவட்டம் வருகை தருகிறார். அன்று மாலை 4 மணிக்கு நாமக்கல் பொம்மைகுட்டைமேடு பகுதியில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசுகிறார். இதில் பங்கேற்கும் அனைவரும் வெள்ளை சீருடையில் கலந்து கொள்ள வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் ரூ.140 கோடியில் போதமலைக்கு சாலை அமைக்கின்ற திட்டம், ரூ.190 கோடி மதிப்பில் நாமக்கல் புறவழிச்சாலை திட்டம் என 2 திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இது எந்த அரசியல் கட்சியாலும் செய்ய முடியாத திட்டமாக அமைந்து உள்ளது. இந்த திட்டங்களுக்கு விதித்திட்டவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவார்.
மேலும் எருமப்பட்டி, சேந்தமங்கலம், மோகனூர், பரமத்திவேலூர், கபிலர்மலை, நாமக்கல் ஒன்றியங்களை இணைத்து ரூ.750 கோடி மதிப்–பில் புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நாமக்கல் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாத நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார். நாமக்கல் வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பது என்றும், செயல்வீரர்கள் கூட்டத்தில் கிழக்கு மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் இளைஞர்களை பங்கேற்க செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்