search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில்  வீடுகள், வணிக வளாகத்தில்  கொசுப்புழு கண்டறியப்பட்டால் அபராதம்
    X

    நகராட்சி பணியாளர்கள் கொசுக்கள் உற்பத்தியாகும் டயர் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்திய காட்சி.

    குமாரபாளையத்தில் வீடுகள், வணிக வளாகத்தில் கொசுப்புழு கண்டறியப்பட்டால் அபராதம்

    • அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளுக்கு சென்று காய்ச்சல் கண்டறியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • கொசுப்புழுக்கள் தேங்கா வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க 40 பணியாளர்களை நியமித்து கொசுப்புழு தடுப்பு மருந்து ஊற்றும் பணி நடந்து வருகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள ெசய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமாரபாளையம் நகராட்சியில் 22 ஆயிரத்து 25 குடியிருப்புகள், 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் நீரினால் பரவக்கூடிய வாந்தி, பேதி, காலரா, டைப்பாய்டு, மஞ்சள் காமாலை, போன்ற தொற்று நோய்களும், கொசுக்கள் மூலம் பரவக்கூடிய மலேரியா, டெங்கு, யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சல், சிக்குன் குனியா போன்றவற்றை தடுக்க குமாரபாளையம் நகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி நகராட்சியின் உள்ள 33 வார்டுகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் நீர் சேமித்து வைக்கப்படும் கலன்கள் ஆய்வு செய்து கொசுப்புழுக்கள் தேங்கா வண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுக்க 40 பணியாளர்களை நியமித்து கொசுப்புழு தடுப்பு மருந்து ஊற்றும் பணி நடந்து வருகிறது.

    தினசரி காலை, மாலை வேளையில் வார்டுகளில் முதிர் கொசுக்களை அழிக்க புகை தெளிப்பான் கருவிகள் கொண்டு புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. துப்புரவு ஆய்வாளர்கள் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்து வமனைகளுக்கு சென்று காய்ச்சல் கண்டறியப்பட்டு தடுப்பு நட வடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீரை காய்ச்சி பருக வேண்டும். வீடுகளில் உள்ள பயனற்ற கழிவுப்பொருட்களை நகராட்சி பணியா ளர்களிடம் அவசியம் கொடுக்க வேண்டும். சேமித்து வைக்கும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என அறி வுரை வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் வீட்டில் கொசுப் புழுக்கள் கண்டறியப்பட்டால் 500 ரூபாய் அபராதமும், வணிக நிறுவனங்களில் கண்டறியப் பட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு இதர பொது சுகாதார சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×