என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செங்கோடு அருகே வாலிபர் கொலையில் நண்பர்கள் 5 பேரிடம் விசாரணை
- ராஜசேகரன் (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு மலைசுத்தி ரோடு மலர்குட்டை அருகே தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார்.
- நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ராஜசேகரனை நண்பர்கள் அடித்து கொலை செய்து விட்டு உடலில் கல்லை கட்டி மலர் குட்டையில் வீசி சென்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை யடிகுட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 28). இவர் நேற்று முன்தினம் இரவு மலைசுத்தி ரோடு மலர்குட்டை அருகே தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார்.
அப்போது போதையில் ராஜசேகரனுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ராஜசேகரனை நண்பர்கள் அடித்து கொலை செய்து விட்டு உடலில் கல்லை கட்டி மலர் குட்டையில் வீசி சென்றனர்.
இதை அடுத்து நேற்று இந்த கொலை தொடர்பாக மலர் குட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (25), பூவரசன் (23), பிரவீன்ராஜ் (27), விக்னேஷ் (27), பெரிய சாமி (25) ஆகியோர் திருச் செங்கோடு போலீஸ் நிலை யத்தில் சரணடைந்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். இன்று அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவ டிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதற்கு இடையே திருச் செங்கோடு தீயணைப்பாளர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், மலர் குட்டையில் கல்லை கட்டி வீசப்பட்ட ராஜசேகரன் உடலை மீட்டனர். பின்னர் ராஜசேகரன் உடலை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீ சார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
முதற்கட்ட விசா ரணை யில், ராஜசேகரனுக்கும் சிலருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு விநாயகர் சிலை வைத்தது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள் ளது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி மதுபோதையில் தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திய போது மீண்டும் அவர்களுடையே தகராறு ஏற்பட்டு கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படு கிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறுகையில், குடிபோதையில் அவர்கள் அடிக்கடி மோதிக் கொள் வார்கள் . ஒன்றாக அமர்ந்து மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் ராஜ சேகரன் கொலை செய்யப் பட்டுள்ளார். மேலும் இந்த கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்