search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
    X

    தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

    • நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா தொடங்கி வைத்தார்.
    • நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியா ளர்களில் ஆண்கள் 49 மற்றும் பெண்கள் 49 ஆக மொத்தம் 98 பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 121 மற்றும் பெண்கள் 182 ஆக மொத்தம் 303 பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 401 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூய்மை பணியா ளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்திலுள்ள 5 நகராட்சியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டு நாமக்கல் நகராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியா ளர்களில் ஆண்கள் 49 மற்றும் பெண்கள் 49 ஆக மொத்தம் 98 பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களில் ஆண்கள் 121 மற்றும் பெண்கள் 182 ஆக மொத்தம் 303 பணியாளர்களும் சேர்த்து மொத்தம் 401 தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

    இதேபோல் குமாரபாளையம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 288 பேர் பயன்பெறும் வகையில் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    மேலும் ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் பள்ளிபாளையம் ஆகிய நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்க ளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் அனைத்து தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டு உடல் பரிசோத னைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் டாக்டர் உமா பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி நகர்மன்ற தலைவர் கலாநிதி, நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×