என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல்லில் மக்கள் நீதிமன்றம் 62 வழக்குகள் ஒரே நாளில் தீர்வு
- நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.
- மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது.
நாமக்கல்:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தலைமையில் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், சிறப்பு மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.
நாமக்கல் ஒருங்கிணைந்த வளாக அமர்வில் நீதிபதிகள் கிருஷ்ணனுன்னி, விஜய்கார்த்திக், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரணை செய்தனர்.
இச்சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக அறிவுசார் சொத்துரிமை நுகர்வோர் வழக்குகளும் மற்றும் ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகளில், சமரசம் செய்து கொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழங்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவகாரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (நிலம் சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை, வருமான வரி, சொத்து வரி பிரச்சனைகள் போன்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு, விரைவாக தீர்ப்பளிக்கப்பட்டது.
மக்கள் நீதிமன்றம் முன்பாக முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழு மையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது.
இச்சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 93 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அதில், 62 வழக்குகளுக்கு ரூ.2 கோடியே 90 லட்சத்து 33 ஆயிரத்து 349 மதிப்பில் தீர்வு காணப்பட்டது.
சிறப்பு மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை தலைமை நீதிபதி தலைமையில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் விஜய்கார்த்திக் செய்திருந்தார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்