என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள்
- அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
- 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 1.30 மணி முதல் தொடங்கி நடைபெறும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வருகிற 11-ந் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டிகள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 1.30 மணி முதல் தொடங்கி நடைபெறும்.
இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம் 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு என நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுள், அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.
கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வழியாகவும், பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம் என்று மாவட்ட கலெக்டர் உமாதெரிவித்து உள்ளார்.