என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கபிலர்மலை வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி குறித்து பயிற்சி முகாம்
- கோப்பணம்பாளையம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
- இந்த பயிற்சிக்கு கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமையேற்று நடத்தினார்.
பரமத்தி வேலூர்:
கபிலர்மலை வட்டாரம் கோப்பணம்பாளையம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமையேற்று நடத்தினார். கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் (விதைச்சான்று) சித்திரைச்செல்வி அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், அங்கக சான்று பெறுவதற்கான முறைகள், உழவர் தொகுப்பு உருவாக்குதல், இணைய தளம் மூலம் பதிவு செய்யும் முறைகள், ஆகியவற்றை குறித்து விளக்கினார். திருச்சி சிறுகமணி பூச்சியியல் துறை உதவிப்பேராசிரியர் ஷீபா ஜாஸ்மின் தென்னையில் ஏற்படும் நோய்கள், பூச்சிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள், உயிரி உரத்தின் பயன்பாடுகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் குறித்து விளக்கம் அளித்தார். கபிலர்மலை வேளாண் உதவி இயக்குநர் ராதாமணி அங்கக வேளாண்மை முறையில் பயிர் சாகுபடி செய்வதன் பயன்கள் பற்றி விரிவாக விவரித்தார். இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் நிஷா ஆகியோர் செய்திருந்தனர்.