search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி
    X

    சாணார்பாளையம் பகுதியில் தொழிலாளர்கள் உருண்டை வெல்லத்தை தயாரித்த போது எடுத்த படம்.

    உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி

    • கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு
    • பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா அண்ணா நகர், நெட்டை யாம்பாளையம், கொந்த ளம், பொன்மலர்பாளையம், சேளூர், பிலிக்கல்பாளையம், சாணார்பா ளையம், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம்,

    கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், ஜமீன் எளம்பிள்ளை, குரும்பல மகாதேவி ,சோழ சிராமணி, திடுமல், சின்னாம்பாளையம், சோழசிராமணி, அய்யம்பாளையம், கபி லர்மலை, பரமத்தி வேலூர்,

    பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவ

    சாயிகள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் உள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

    கரும்புகளை வாங்கிய ஆலை உரிமையாளர்கள் கரும்புகளை சாறு பிழிந்து பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக கட்டி, பிலக்கல்பாளை யத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கு கொண்டு வரு கின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.

    வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வெல்லத்தை ஏலம் எடுத்துச் செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300- வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,300 வரையிலும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,230 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,230 வரையிலும் ஏலம் போனது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    Next Story
    ×