search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் தேர்த் திருவிழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் லட்சுமி நரசிம்மர்.

    நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் தேர்த் திருவிழா

    • லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும்.
    • இங்கு லட்சுமி நரசிம்மர் சாமி மற்றும் சோமேஸ்வரர் சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் நங்க வள்ளியில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இங்கு லட்சுமி நரசிம்மர் சாமி மற்றும் சோமேஸ்வரர் சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 31-ந் தேதி இரவு சிம்ம வாகனத்தில் சாமி திருவீதி உலா, 2-ந்தேதி சேஷ வாகனம், 2-ந் தேதி அனுமந்த வாகனம், 3-ந் தேதி யானை வாகனம், 4-ந் தேதி திருக்கருட வாகனம் வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. அன்று இரவு சாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சாமிக்கு பல்வேறு அபிஷே கங்கள் நடைபெற்றது. இத னைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு காட்சியளித்தார்.

    இதன் தொடர்ச்சியாக சாமி தேரில் எழுந்தருளல் நடந்தது. மேளதாளம் முழங்க கோவிலில் இருந்து அழைத்துவரப்பட்ட விநாயகர், லட்சுமி நரசிம்மர், சோமேஸ்வரர் 3 தேர்களில் எழுந்தருளினர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    இன்று(வியாழக்கிழமை) மாலை தேரோட்டம் நடைபெறுகிறது. விநாயகர் தேர், சோமேஸ்வரர் சாமி தேர், லட்சுமி நரசிம்மர் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கபப்டுகிறது. முன்னாள் அமைச்சர் டி. எம். செல்வகணபதி வடம் பிடித்து தேரை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 5 நாட்கள் இந்த தேரோட்டம் நடைபெறும். 3 தேர்களும் 10-ந் தேதி நிலை சேரும். 11-ந் தேதி சத்தாபரணம், 12-ந் வசந்த உற்சவம், 13-ந்தேதி 7 சுற்று உற்சவத்துடன் விழா நிறைவடையும்.

    இதில் மாவட்ட அறநிலை குழு தலைவர் முருகன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர்கள் தவமணி, கார்த்திக், செல்வம் உட்பட பலர் கலந்து கொள்கி றார்கள். இதற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தி னர் செய்துள்ளார்கள்.

    Next Story
    ×