என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு
- ஆய்வுகள் பற்றி சிறப்பாக விளக்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- அறிவியல் இயக்கத்தின் தஞ்சை மாவட்டச்செயலாளர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு அறிவியல் இயக்க த்தின் தஞ்சை மாவட்டக்கிளை ஏற்பாடு செய்திருந்த 31- வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
காலையில் நடைபெற்ற துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் முன்னிலை வகித்தார்.
மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.இதையடுத்து கலெக்டர் முன்னிலையில் மாணவர்கள் தாங்கள் செய்த ஆய்வுகளை விளக்கிப் பேசி பிரச்சனைகளுக்கான தீர்வுகளை கூறினர். தங்கள் ஆய்வுகளை பற்றி சிறப்பாக விளக்கிய மாணவர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பேராசிரியர் ஹேமலதா துவக்கவிழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் ராஜசேகர் , பேராசிரியர் மாரியப்பன், தேசிய பசுமைப்படை ஒருங்கிணை ப்பாளர் முனைவர் ராம்மனோகர் ஆகியோர் ஆய்வுகளை மதிப்பீடு செய்வது தொடர்பாக பயிற்சியளித்தனர்.
இதில் 50 -க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவியர்கள் 600 தலைப்புகளில் ஆய்வுகட்டுரை சமர்பித்தனர்.
இதிலிருந்து சிறந்த 60 ஆய்வு கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிற 4-ந் தேதி புதுக்கோட்டையில் நடைபெற உள்ள மண்டல மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் மாலையில் நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். அறிவியல் இயக்கத்தின் தஞ்சை மாவட்டச்செயலர் முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநிலத்துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் சுகுமாரன், ஆய்வின் நோக்கம் பற்றி சிறப்புரையாற்றினார்.
மாவட்ட கௌரவத் தலைவர் கார்த்திகேயன், மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச்செயலர் ஸ்டீபன்நாதன் வாழ்த்துரை வழங்கினார்.
மண்டல மாநாட்டில் பங்கேற்க உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு மாவட்டக்கருவூல அலுவலர் கணேஷ்குமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாநாட்டில் பங்கேற்ற பள்ளிகளின் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழும் பள்ளிகளுக்கு கேடயமும் வழங்கப்பட்டன.
தஞ்சை மாவட்ட அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் தியாகராஜன், செந்தில்குமார், பட்டுக்கோட்டை கிளைசெயலர் செந்தமிழ் செல்வி, மாத்தூர் கிளை சுகந்தி, மாத்தூர் கிழக்கு ஊராட்சிமன்ற தலைவரும் அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் துணைச்செயலருமாகிய மஞ்சுளா, அரியலூர் மாவட்டச்செயலர் ஞானசேகர் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.
விலங்கியல் துறைத்தலைவர் சந்திரகலா, தமிழ்த்துறையை சார்ந்த பேராசிரியர் தமிழடியான் மற்றும் கல்லூரியின் அனைத்து துறையை சார்ந்த பேராசிரியர்களும் நடுவர்களாக பணியாற்றி மாணவர்களின் ஆய்வு அறிக்கைகளை மதிப்பீடு செய்தனர்.
நிகழ்ச்சியை கல்லூரி மாணவி பார்வதி தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சி முடிவில் மாவட்டத்துணைத் தலைவர் முருகானந்தம் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்