search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நேஷனல் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்பு
    X

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.

    நேஷனல் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி-ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பங்கேற்பு

    • கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி வழி காட்டல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
    • தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்றால் நீட் தேர்வில் 585 மதிப்பெண்களுக்கு மேல் பெறவேண்டும். மீன்வளத்துறை சார்ந்த படிப்புகள் உள்ளது

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி யில் உயர்கல்வி வழி காட்டல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிக்கு வழி எனும் தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்றால் நீட் தேர்வில் 585 மதிப்பெண்களுக்கு மேல் பெறவேண்டும். மீன்வளத்துறை சார்ந்த படிப்புகள் உள்ளது. வணிகவியல் மற்றும் பட்டய கணக்காளர் படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. தற்போதைய வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொறியியல் படிப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

    அவற்றில், கணினி அறிவியல், பொறியியல், தகவல் தொழி ல்நுட்ப பொறியியல், செயற்கை நுண்ணறிவு தரவு அறிவியல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகள் வேலைவாய்ப்பினை வழங்கும் படிப்புக்களாக விளங்குகின்றன.

    வரும் 4 ஆண்டு காலங்க ளில் கணினி அறிவியல் பொறியியலுடன் இணைந்த மின்னணு தொடர்பு பொறியியல் படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் 18-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 1800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

    ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்ச லம், இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல், முதல்வர் முனைவர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் வழிகாட்டு தலின்படி அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவர் எம்.ஏ.நீலகண்டன் தலைமையில் கல்லூரிப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×