என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லையப்பர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் ஏற்றப்பட்ட தேசியக்கொடி - காந்திமதி யானை மரியாதை செலுத்தியது
Byமாலை மலர்15 Aug 2022 2:47 PM IST
- நெல்லையப்பர் கோவிலில் 75-வது சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
- கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தேசிய கொடியை ஏற்றினார்
நெல்லை:
சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட ஒரு சில கோவில்களில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம்.
அதன்படி தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான டவுன் நெல்லையப்பர் கோவிலில் 75-வது சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தேசிய கொடியை ஏற்றினார். அப்போது கோவில் யானை காந்திமதி மரியாதை செய்தது.
தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்தனர். அங்கிருந்தவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு, இனிப்புகளும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×