search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராவூரணி அரசு கலைக்கல்லூரியில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு முகாம்
    X

    அரசு கலைக் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    பேராவூரணி அரசு கலைக்கல்லூரியில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு முகாம்

    • பேராவூரணி அரசு கல்லூரியில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • வினாடி வினாவில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஸ்பர்ஷ் 2023 இரு வார திருவிழாவை முன்னிட்டு துணை இயக்குனர் சுகாதார நலப் பணிகள்,

    துணை இயக்குனர் தொழு நோய் அலுவலர் மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் அறிவுரைப்படி அழகியநாயகிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழுநோய் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் நலக்கல்வி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.

    வட்டார மருத்துவமல்லா மேற்பார்வையாளர் இளந்திரையன், சுகாதார ஆய்வாளர்கள் முருகானந்தம், அவினாஷ் முகுந்தன் ஆகியோர் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்தனர்.

    கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் பழனிவேலு, முனைவர் ராஜ்மோகன், பேராசிரியர் வினோத்குமார் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தொழுநோய் விழிப்புணர்வு குறித்த வினாடி வினாவில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    அரசு மருத்துவ மனைகளில் வெள்ளிக்கி ழமை தோறும் தொழுநோய் பாதிக்கப்–பட்டவர்க ளுக்கு இலவச மருத்துவம் பார்க்கப்படும் என தெரிவித்தனர்.

    Next Story
    ×