search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் தேசிய நூலக வாரவிழா
    X

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட போது எடுத்தபடம்.

    லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் தேசிய நூலக வாரவிழா

    • நெல்லை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் மாணவர்களின் அறிவுதிறனை மேலும் வளர்க்கும் விதமாக தேசிய நூலக வாரவிழா பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தீபா ராஜ்குமார் பரிசுகள் வாங்கினார்.

    நெல்லை:

    நெல்லை ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் மாணவர்களின் அறிவுதிறனை மேலும் வளர்க்கும் விதமாக தேசிய நூலக வாரவிழா பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் லெட்சுமிராமன் கல்வி அறக்கட்டளை டிரஸ்டி தீபா ராஜ்குமார் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி ஸ்ரீசாய் பிரியா வரவேற்று பேசினார்.

    விழாவில் மாணவ - மாணவிகளுக்கு தலைசிறந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தைப் போல நடித்துக் காட்டுதல், வாசிப்பு பயிற்சி, புத்தகத்திற்கான அலங்கார வெளியுரைகள் தயாரித்தல், தலைசிறந்த புத்தகம் குறித்த விமர்சனங்களை முன் வைத்தல், புத்தகம் குறித்த விழிப்புணர்வு செய்திகள் எழுத வைத்தல், கொடுக்கப்பட்ட முடிவடையாத கதை பகுதிக்கு முடிவுரை எழுத வைத்தல், கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு சிறந்த கதை எழுதி தலைப்பிடுதல், இன்றைய நவீன காலத்தில் அவசியமானது நூலகமே, இணையதளமே என்ற தலைப்பில் மாணவர்களிடையே சிறப்பு பட்டிமன்றம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு தீபா ராஜ்குமார் பரிசுகள் வாங்கினார்.

    பள்ளியின் முதல்வர் இந்துமதி, தலைமை ஆசிரியை சூரியகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் 8-ம் வகுப்பு மாணவி ஹேமா நன்றி கூறினார்.

    Next Story
    ×