என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்
- ஆடிப்பூர அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடக்கிறது.
- பன்னிரு திருமுறை நூல்கள் அலங்கரிக்கப்பட்டு யானை மீது வைத்து அம்பாள் திருவீதியுலா நடக்கிறது.
திருவையாறு:
தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஸ்ரீ அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயிலில் இன்று நவராத்திரி உற்சவ விழா தொடங்குகிறது.
இன்று முதல் அடுத்த மாதம் அக்டோபர் 4 ந்தேதி வரையில் நடக்கும் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு மூலவர் பிரகாரத்தில் 2 பக்கமும் கொலுக் காட்சி வைக்கப்பட்டுள்ளது.
இக்கொலுவை பக்தர்களும் குழந்தைகளும் கண்டு களித்து வழிபடுகிறார்கள்.
மேலும் 'தினமும் மாலையில் ஆடிப்பூர அம்மனுக்கு நவராத்திரி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறதுவேத சாஸ்திரிகளின் வேதபாரா யணம், தேவி மகாத்மியம், அபிராமி அந்தாதி பாரா யணம் நடக்கிறது.
அம்மன் பிரகார உலா நடக்கிறது.
5 ஆம் நாள் 30 ந்தேதி காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் ஆராதனையும் மாலையில் பன்னிரு திருமுறை நூல்கள் அலங்கரி க்கப்பட்டு யானை மீது வைத்து அம்பாரித் திருவீதி உலா வருகிறது. 2 ந்தேதி ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது.
கொலு மண்டபத்தில் ஆன்மீக சான்றோரின் நவராத்திரி சொற்பொழிவுகளும் இன்னிசைக் கலை நிழ்ச்சிகளும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர் கோயில் நிர்வாகிகள் செய்திருக்கிறார்கள்.