search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை பகுதி கோவில்களில் நவராத்திரி விழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்.

    நாகை பகுதி கோவில்களில் நவராத்திரி விழா

    • சவுந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் ஆமாதள நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    மருங்கூர் கோவில்

    இதேபோல், மருங்கூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் சவுந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், கணக்கர் சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×