என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் அருகே சிறுமியை கடத்தி மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற தாய் போக்சோவில் கைது- பரபரப்பு தகவல்
- 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண், குழந்தைகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்குத் திருமணம் செய்தால், அது சட்டப்படி குற்றம்;
- சிறுமியை கடத்தி தாய் ஒருவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காடையாம்பட்டி:
குழந்தைத் திருமணத்தைத் தடுக்க, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006-ல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண், குழந்தைகளாகக் கருதப்படுவார்கள். இவர்களுக்குத் திருமணம் செய்தால், அது சட்டப்படி குற்றம்; இத்திருமணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
பழக்கம்
இந்த நிலையில் சேலம் அருேக சிறுமியை கடத்தி தாய் ஒருவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 47). இவருடைய உறவினர் ஒருவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா டேனீஷ்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார்.
இந்த உறவினர் வீட்டுக்கு லட்சுமியின் மகன் ரமேஷ்குமார் அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ரமேஷ்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே ரமேஷ்குமாரின் தாய் லட்சுமி, தனது மகனுக்கு பல்வேறு இடங்களில் வரன் பார்த்து வந்தார். ஆனால் பெண் வீட்டார் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் மகனுக்கு அந்த சிறுமியை திருமணம் செய்து வைக்க லட்சுமி முடிவு செய்தார்.
சிறுமியின் வீட்டுக்கு சென்று பெண் கேட்டால் கொடுக்கமாட்டார்கள் என்பதை அறிந்த அவர், நைசாக பேசி சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டினார்.
புகார்
கடந்த 22-ந்தேதி லட்சுமி, டேனீஷ்பேட்டைக்கு வந்தார். அங்கு வீட்டில் இருந்த சிறுமியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பெற்றோருக்கு தெரியாமல் நைசாக சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு வீட்டின் ஒரு அறையில் அடைத்து வைத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுவதை பார்த்த சிறுமி அதிர்ச்சி அடைந்தார். ரமேஷ்குமாருக்கு தன்னை திருமணம் செய்து வைக்க இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே மகளை பல்வேறு இடங்களில் தேடியும் பெற்றோரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அக்கம், பக்கத்தில் விசாரித்தபோதும், மகள் குறித்து எதுவும் தெரியவில்லை. இதனால் மகள் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என தெரியாததால் கவலை அடைந்த பெற்றோர் இது பற்றி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
பத்திரமாக மீட்பு
அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை லட்சுமி கடத்தி சென்றிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார், சிறுமியை மீட்கும் நடவடிக்கையை துரிதமாக எடுத்தனர். பொம்மிடிக்கு சென்று சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார், லட்சுமி மீது குழந்தை திருமணத்திற்கு ஏற்பாடு செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் சிறையில் அவரை அடைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ரமேஷ்குமாரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்