search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் போதை மறுவாழ்வு மையம் மூடல்?
    X

    அரசு ஆஸ்பத்திரியில் அமைந்துள்ள குடி- போதை மறுவாழ்வு மையம்.

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் போதை மறுவாழ்வு மையம் மூடல்?

    • நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் அரசு சார்பில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • மாதந்தோறும் 250 நோயாளிகள் வரை போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் மனநல சிகிச்சைத் துறை செயல் படுகிறது. இந்த துறையில் போதைக்கு அடிமையான நோயாளிகள் உள்நோயாளி களாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த வார்டில் உள்ள நோயாளிகளை கவனிக்க தற்காலி கமாக தொகுப்பூதி யத்தில் செவிலியர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப் பட்டனர். அதன்படி செவிலியர், மன நல ஆலோ சகர், தரவு உள்ளீட்டாளர், இரவு காவலர், இதர பணியா ளர்கள் என சுமார் 13 பேர் வரை நியமனம் செய்ய ப்பட்டு இருந்தனர். அவர்க ளுக்கு டாஸ்மாக் நிறுவனம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு போதை மறுவாழ்வு சிறப்பு மையங்கள் செயல்பட்டு வந்தது.

    நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் அரசு சார்பில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை பழைய கட்டிடத்தில் போதைக்கு அடிமை யானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 13 பேரின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. மேலும் அவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.13 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 22-ந்தேதி வழக்கம்போல் பணிக்கு சென்ற செவிலியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இனி பணிக்கு வரவேண்டாம். தங்களுக்கு ஊதியம் வழங்க டாஸ்மாக் நிறுவனம் இனி நிதி ஒதுக்காது என தெரிவித்து விட்டதால் இந்த மையத்தை கவனிக்க இனி ஊழியர்களை நியமிக்க முடியாது என்று அவர்க ளிடம் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து பாதிக்க ப்பட்ட செவிலி யர்கள் கூறுகையில், குடிப் பழக்க த்தால் பலரும் அடிமை யாகி இளம் தலைமுறை யினரும் சீரழிந்து வரும் நிலையில் மக்களிடம் வரவேற்பு பெற்ற இந்த மறுவாழ்வு மையம் நிதி ஒதுக்கப்படா ததால் முடக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் நிறு வனம் மூலம் உரிய நிதியை பெற்று தந்து எங்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.

    மாவட்டத்தில் குறைந்த பட்சம் மாதந்தோறும் 250 நோயாளிகள் வரை போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது அரசின் முடிவால் எங்களது வாழ்வாதாரமும் கேள்வி குறியாகி உள்ளது. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கவனத்தில் எடுத்து எங்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்,

    Next Story
    ×