search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில்  மண் குவியல்களால் வாகன ஓட்டிகள் அவதி;  நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?
    X

    நெடுஞ்சாலையில் குவிந்துள்ள மண் குவியல்.

    நெல்லை- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மண் குவியல்களால் வாகன ஓட்டிகள் அவதி; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்குமா?

    • நெல்லை - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது.
    • இந்த சாலையில் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து அரசு பொறியியல் கல்லூரி வரை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பேரிக்கார்டர்கள் அருகே கடந்த 2 நாட்களாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது.

    இந்த நெடுஞ்சாலையில் நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவிற்கும் இந்த வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகிறது.

    மண் குவியல்

    இந்த நெடுஞ்சாலையில் உள்ள சுற்றுவட்டாரத்தில் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும், இந்த வழியாகத்தான் வாகனங்கள் சென்று வருகின்றன.

    தற்போது இந்த சாலையில் புதிய பஸ் நிலையம் அருகில் இருந்து அரசு பொறியியல் கல்லூரி வரை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள கான்கிரீட் பேரிக்கார்டர்கள் அருகே கடந்த 2 நாட்களாக 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் குவியல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    மண் குவியல்கள் சாலையை ஆக்கிரமித்து குவித்து வைக்கப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் அவ்வப்போது மண் குவியல் மீது மோதி சிறு விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் பெரும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×