என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையப்பர் சுயம்புவாக தோன்றிய திருவிளையாடல் நிகழ்ச்சி
- திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான நெல்லையப்பர் சுயம்பு வாக தோன்றும் திருவிளையாடல் காட்சி இன்று நடைபெற்றது.
- விழாவையொட்டி சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.
நெல்லை:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வரலாற்று நிகழ்ச்சி
11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்பு வாக தோன்றும் திருவிளை யாடல் காட்சி 4-ம் நாளான இன்று நடைபெற்றது.
இந்த வரலாற்று திருவிளையாடல் நிகழ்ச்சி கோவில் உட்பிரகாரத்தில் தாமிர சபை மண்டபம் அருகே அமைந்திருக்கும் ஸ்தல விருட்சம் முன்பு நடைபெற்றது. தொடர்ந்து சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.
வீதி உலா
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திர திருவிழா வின் 4-ம் நாளான இன்று இரவு சுவாமி நெல்லை யப்பர்- காந்திமதியம்மாள் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதிஉலா நடக்கிறது.