என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிரில் தயாரிப்பு கூடங்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க நெட்கோபியா ஒருங்கிணைப்பாளர் ரவி வேண்டுகோள்
- மாநிலம் முழுவதும் கிரில் தொழிலுக்கு தனித்தொழிற்பேட்டைகள் அமைக்க வலியுறுத்தல்
- கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் உண்ணாவிரதம், கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு
கோவை,
கோயம்புத்தூர் கிரில் தயாரிப்பாளர் நல சங்கமான கோஜிம்வா தலைவரும், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை மாவட்ட கிரில் தொழில் கூட்டமைப்பு நெட்கோபியா ஒருங்கிணை ப்பாளருமான திருமலை எம்.ரவி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியிடம் தொழில் முனைவோர்கள் சந்திப்பு கூட்டத்தில் எங்கள் அமைப்பு சார்பில் மனு அளித்தோம். அதில் விசைத்தறி கூடங்களுக்கு 750 யூனிட் வழங்குவது போல, கிரில் தயாரிப்பு கூடங்களுக்கும் 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் விசைத்தறிக்கூ டங்களுக்கு தற்போது 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி இலவச மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. நாங்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்..
விசைத்தறிக் கூடங்களைப் போலவே கிரில் தயாரிப்பு கூடங்களும் கூலிக்கு தொழில் செய்யும் நிலையில் தான் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் சொத்து வரி ,தொழில் வரி, மின்கட்டணம், தொழிலாளர் சம்பளம், மூலப்பொருட்கள் விலை ஆகியவை உயர்ந்து உள்ளது. இதனால் கிரில் தயாரிப்பு பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளது.
எனவே வாடி க்கை யாளர்க ளிடம் விலை உயர்வை கட்டாய ப்படுத்தி திணிக்க வேண்டிய சூழ லில் உள்ளோம். இதனால் எங்க ளுக்கு ஆர்டர்கள் குறைந்து பல லட்சம் தொழிலா ளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரில் தொழிலாளர்கள் நலம் காக்க தனி நலவாரியம் அமைக்க வேண்டும்,. மேலும் பயிற்சி பெற்ற கிரில் தொழிலாளருக்கு பற்றாக்குறை இருப்பதால், அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் கிரில் பிட்டர், கிரில் வெல்டர் பாடதிட்டங்களை புதிதாக தொடங்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சியுடன் ஊதியமும் வழங்க தயாராக உள்ளோம்.
மாநிலம் முழுவதும் கிரில் தொழிலுக்கு தனித்தொழிற்பேட்டைகள் அமைத்து அதனை இலவசமாகவோ, எளிய தவணை முறையிலோ கொடுக்க வேண்டும். தற்போது முக்கிய பிரச்சினையாக உள்ள பீக் ஹவர் மின்சார கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் .எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் உண்ணாவிரதம் மற்றும் கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்