search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரம் அருகே ரூ.81 லட்சத்தில் புதிய கட்டிடம்- கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
    X

    ஓட்டப்பிடாரம் அருகே முறம்பன் கிராமத்தில் ஒரு பயனாளிக்கு முதியோர் உதவித்தொகையை கனிமொழி எம்.பி வழங்கிய போது எடுத்த படம்.அருகில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் உள்ளனர்.

    ஓட்டப்பிடாரம் அருகே ரூ.81 லட்சத்தில் புதிய கட்டிடம்- கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

    • பெண்கள் படிக்க படிக்க தான் சமூகம் முன்னேற்றம் வரும் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.
    • படித்தால் மட்டுமே பெண்கள் சமூகத்தில் மதிக்கப்படுகின்றனர் என கனிமொழி கூறினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி செக்காரக்குடி கிராமத்தில் ரூ.5 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை, ரூ.11 லட்சம் செலவில் புதிய நூலக கட்டிடம், ஒட்டநத்தம் கிராமத்தில் ரூ.35 லட்சம் செலவில் வட்டாரத் துணை வேளாண்மை விரிவாக்கம் மையம் மற்றும் ரூ.30 லட்சம் செலவில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டிடத்தை கனிமொழி எம்.பி திறந்து வைத்து பேசியதாவது:- பெண்கள் படிக்க படிக்க தான் சமூகம் முன்னேற்றம் வரும். பெண்கள் வீடுகளில் வீட்டு வேலைகளை முடித்து ஓய்வு நேரங்களில் புத்தகங்களை படிக்க வேண்டும். பெண்கள் படித்தால் மட்டுமே குழந்தைகளுக்கு படிக்க கற்று கொடுக்க முடியும். பெண்கள் படிப்பதை பார்த்து குழந்தைகளுக்கும் படிக்கும் எண்ணம் வரும். சமூகத்தில் யார் யாருக்கெல்லாம் படிக்க மறுக்கப்பட்டதோ அதை மாற்றிக் காட்டி படிக்க வைத்த அரசு அண்ணா கலைஞர் வழிகாட்டிய அரசுதான். படித்தால் மட்டுமே பெண்கள் சமூகத்தில் மதிக்கப்படுகின்றனர் என்றார்.

    விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் தாசிலர் நிஷாந்தினி, சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், யூனியன் ஆணையாளர் சிவபாலன், யூனியன் கூடுதல் ஆணையாளர் ராம்ராஜ், மண்டல துணை தாசிலர் ஸ்டாலின், பஞ்சாயத்து தலைவர்கள் தேன்மொழி, சரிதா ராமலட்சுமி, ஓட்டப்பிடாரம் யூனியன் உதவி பொறியாளர் ரவி கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×